சென்னை சாலைகளில் அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணத்தின் போது படிகள் மற்றும் பக்கவாட்டிலும் தொங்கிக்கொண்டு செல்வதும் பேருந்துகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
அதேபோல "பஸ் டே" (Bus Day in Tamil Nadu) என்ற பெயரில் பேருந்து மீது ஏறி ஆடுவதும், அப்பொழுது சில சோகச் சம்பவங்கள் அரங்கேறியதும் நாம் அனைவரும் அறிந்ததே. "பஸ் டே" குறித்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதும் நாம் பார்த்திருக்கக்கூடும்.
இதனையடுத்து தமிழக போலீசாரின் தீவிர கண்காணிப்பின் காரணமாக அது போன்ற நிகழ்வுகள் குறைந்தன. இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் துவங்கியதிலிருந்து, அதுபோன்ற சம்பவங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் சில இடங்களில் மீண்டும் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பமாகி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை சென்னை புரசைவாக்கத்தில் 29A வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். இது குறித்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்களது பணிமனை மேலாளரிடம் புகார் கூறியிருந்த நிலையில், இவர்கள் போலவே மற்ற பேருந்து ஓட்டுனர்களும் தொடர் புகார் கூறவே பெரம்பூர் பணிமனையின் கிளை மேலாளர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க: நண்பனின் திருமணத்துக்கு இப்படி ஒரு சீர் வரிசையா? ஆச்சர்யப்படுத்தும் வீடியோ!
அந்த புகாரில் மாநகர போக்குவரத்து கழகத்தின் பெரம்பூர் பணிமனையிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் தினசரி பேருந்துகள் இயக்கப்படு வருகின்றன. அப்பேருந்துகளில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 29A, 29C, 38C, 42 மற்றும் 142 ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் அவ்வழிகளில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் பேருந்துகளில் உள்ளே வந்து பயணம் செய்யாமல் படிக்கட்டில் ஏறி இறங்கியும் படிகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டும் பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்தும் பேருந்துகளில் கலாட்டா செய்கின்றனர்.
மேலும் அந்த மாணவர்களுக்கு நேரடியாகவும், பள்ளிகளுக்கு நேரில் சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை கூறிய பிறகும், சில மாணவர்கள் தொடர்ந்து கலாட்டா செய்து வருவதாகவும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் அடிப்படையில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: லிஃப்டுக்குள் 2 மணி நேரம் சிக்கிய பயணிகள்!! திக் திக் நிமிடங்கள்!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR