திங்கட்கிழமை இரவு முதல் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சில இடங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே பகலில் கனமழை இருந்தது. சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் நவம்பர் 15-ம் தேதி வரை கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்சம் 12 செ.மீ மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு அதிக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!


நவம்பர் 17ம் தேதி கனமழை இருக்கும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொறுத்தவரை இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் இருக்கும் என்றும், வெப்பநிலை 25°C முதல் 33°C வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் மழை இருந்து வருகிறது. இந்த ஆண்டு இயல்பை விட சற்று கூடுதல் மழை பொலிவு இருந்தது. புதுச்சேரி, காரைக்கால் தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்து வருகிறது. மேலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்றும் வீசுகிறது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலும் அதிக கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறையா?


நேற்று தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வடசென்னை பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் திங்கட்கிழமை இரவு முதலே கனமழை பெய்து தொடங்கியது. குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள திருவெற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம், எண்ணூர், மணலி, பெரம்பூர் பகுதிகளில் மழை அதிக இருந்தது. இதனால் நேற்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தாழ்வான பகுதிகளில் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. திருவொற்றியூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. நேற்று இரவு முதல் மழை பெரிதாக இல்லை என்பதால் இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை இன்று அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


துணை முதல்வர் ஆய்வு


சென்னை காரப்பாக்கத்தில் ஒக்கியம் மடுவு, கேசிஜி தனியார் கல்லூரி அருகே நீர்வழித்தடம் பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்று எழிலகம் மற்றும் சென்னை மாநகராட்சி அவரச கால கட்டுப்பாட்டு மையத்தை இன்று நேரில் ஆய்வு செய்தோம். சென்ற சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நேரில் வந்து ஆய்வு செய்தோம்,  அதனை தொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளை இப்பொழுது ஆய்வு செய்து வருகிறோம். வேளச்சேரி, பள்ளிக்கரணை, காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் வழிவகை செய்துள்ளோம். 15 நாட்களுக்கு முன்பு மழை வரும் என வானிலை ஆய்வு எச்சரித்தபோது பணிகள் பெரும்பான்மையானவை நிறைவு பெற்று விட்டன. தற்போதும் அதே போல பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க - "எடப்பாடிக்கு என்ன சொல்றதுனு தெரில" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ