Heavy Rain In Tamil Nadu: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி காற்றெழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
வங்கக்கடலில் காற்றெழுத்த தாழ்வு பகுதி
ஏற்கனவே வங்கக்கடலில் உருவாகி இருந்த சுழற்சியானது காற்றெழுத்த தாழ்வு பகுதியா தற்போது உருவாகி இருப்பதால், அதன் தாக்கம் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. காற்றெழுத்த தாழ்வு அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் இலங்கை நோக்கி நகரக்கூடும் என்பதால், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லேசான இடியுடன் கூடிய கனமழை
குறிப்பாக ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மழை பரவலாக பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை காலை முதலே லேசான இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
எங்கெங்கெல்லாம் லேசான மழை பெய்யும்?
செங்குன்றம், திருவற்றியூர் உள்ளிட்ட இடங்கள், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, வேடந்தாங்கல், மதுராந்தகம், செய்யூர், வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எங்கெங்கெல்லாம் கனமழை பெய்யும்?
சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கனமழை திருவண்ணாமலை, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகள் வரைக்கும் நீடிக்கிறதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நேற்று இரவு முதல் சென்னையில் தொடந்து லேசான மழை முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்பட்டதும், அதன் பின்னர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அளிக்கப்பட்டது. கல்லூரிகள் வழக்கும்போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க - இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!
மேலும் படிக்க - Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
மேலும் படிக்க - தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ