தமிழக வெற்றிக் கழகம் மாநாடு...? குழப்பத்தில் விஜய் - பின்னணி என்ன?
TVK Maanadu Date Postpone: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
TVK Maanadu May Be Get Postponed: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடிகர் விஜய் அவரது புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டடை வரும் செப். 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். இங்கு மாநாடு நடத்த கடந்த சில வாரங்களுக்கு முன்னரே காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை தவெக நிர்வாகிகளிடம் மாநாடு குறித்து 21 கேள்விகளுக்கு பதில் கோரியது.
இதையடுத்து, தவெக சார்பில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த செப். 6ஆம் தேதி விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து 21 கேள்விகளுக்கும் பதில் அளித்த மனுவை அளித்தார். இதை தொடர்ந்து, மாநாடு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி நேற்று உறுதியானது. அதுமட்டுமின்றி, இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவுசெய்ய கட்சியானது. இதனை நடிகர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மாநாடு மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு
செப். 5இல் தி கோட் படத்தின் ரிலீஸ் மற்றும் அதன் தற்போதைய வசூல் வெற்றி ஆகியவற்றால் ரசிகர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் ஏக குஷியில் இருக்கின்றனர். அதில் தவெக கட்சியானது பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த இலக்காக விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டைதான் அதிகம் எதிர்பார்த்திருக்கின்றனர். விஜய் கடந்த பிப்ரவரியில் கட்சித் தொடங்கிய பின், அக்கட்சியின் சார்பில் பொது இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால் இந்த மாநாட்டிற்கு தவெக தொண்டர்களிடம் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | விஜய்யைக் கண்டு திமுக பயப்படுகிறதா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?
இந்நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப். 23ஆம் தேதி நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், மாநாடு தள்ளிப்போக அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாடு நடத்த தற்போது குறுகிய காலமே இருப்பதால் மாவட்ட அளவில் மாநாட்டு ஏற்பாடுகளை நடத்தி ஆட்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழப்பத்தில் விஜய்?
அதுமட்டுமின்றி மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்ட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, தவெக தலைமை உரிய ஏற்பாடுகளை செய்ய இன்னும் அவகாசம் வேண்டும் என்பதால் விக்கிரவாண்டி மாநாட்டு தேதியை சிறிது தள்ளிப்போட விஜய் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாடு சிறப்பாக நடக்கவும், அகில இந்திய அளவில் தலைவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைக்கவும் ஆலோசிக்கப்படுவதால் மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தவெக தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
முக்கியமாக, நேற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் மற்றும் மாநாட்டு தேதி இரண்டையும் விஜய் அறிவிக்க இருந்த நிலையில், மாநாட்டு அறிவிப்பை வெளியிடாதது இதற்குதான் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருங்கள் என தொண்டர்களிடம் அறிவுறுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தவெக தலைவர் விஜய் ஆலோசனை
தவெக மாநாடு தொடர்பாக விஜய், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய 5 வரலாற்று இடங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ