தமிழ்நாட்டில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய 5 வரலாற்று இடங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் சிலைகள் பண்டைய கால கட்டிடக்கலையை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /6

தமிழ்நாடு கோயில்களின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல வரலாற்று படிவங்கள் நிறைந்துள்ளன. பெரிய கோவில்கள் தொடங்கி, அரண்மனைகள், மாளிகைகள் இங்குள்ளன.

2 /6

விவேகானந்தர் சிலை, கன்னியாகுமாரி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு சின்னம் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். விவேகானந்தர் நினைவாக 1970ல் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. 

3 /6

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் கட்டியது தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டை உலக போர் சமயத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான வரலாற்று அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு கொடுக்கிறது.

4 /6

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவில் அதன் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இந்தக் கோயில் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகும்.

5 /6

திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, 1636ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள பெரிய வெள்ளை தூண்கள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. 

6 /6

மகாபலிபுரம், சென்னை மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இங்கு பாறையில் செதுக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பல வரலாற்று சிற்பங்கள் உள்ளன. இது தமிழ்நாட்டின் கட்டிடக்கலையை எடுத்து காட்டுகிறது.