இன்று கிருஷ்ண ஜெயந்தி. நாடு முழுவதும் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி வரும் நிலையில், வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை  போல வேடமிட்டு பெற்றோர்கள் அழகு பார்த்து மகிழ்வர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வன்முறையால் எந்த பயனும் இல்லை - மோகன் பகவத் : சாத்தான் வேதம் ஓதுகிறது - மனோ தங்கராஜ்


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில், கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் ஊர்வலமாக வந்து பொதுமக்களை கவர்ந்தனர். 


ஜிஆர்டி சர்க்கிள் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் ஒசூர் எம்ஜி சாலையில் வந்தபோது வி.எச்.பியின் கொடியேற்றப்பட்டது. விஎச்பி வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் சு.வே.ராமன் தலைமையில் அரங்கேறிய இந்த விழாவில் கிருஷ்ண பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும், ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் எழுப்பப்பட்டன. இந்த ஊர்வலம் மீண்டும் ஜிஆர்டி சர்க்கிள் கிருஷ்ணர் கோவில் முன்பு நிறைவுப்பெற்றது. இதில் 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றிருந்தனர். 


இந்த ஊர்வலத்தின் போது உரையாற்றிய விஎச்பி வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் சு.வே.ராமன், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, 
‘நமது கொள்கைகளுக்கு எதிராக உள்ள பெரியார் சிலைகளை உடைத்து எரிய வேண்டிய சூழ்நிலை வந்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் பேசிக்கொண்டே இருக்க மாட்டோம். 1992ம் ஆண்டு டிசம்பர் 6ல் சொன்னதை செய்தோம்’ என்று தெரிவித்துள்ளார். 


டிசம்பர் 6ல் சொன்னதைச் செய்தோம் என்று பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


மேலும் படிக்க | RSS அலுவலகத்தில் பிரதமர் கொடியேற்றுவாரா? தொல் திருமாவளவன் கேள்வி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ