சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ ரயிலின் (Chennai Metro Train) அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் (Chennai Metro Train Service) தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் (Free Travel) செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. 


மேலும், அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் சென்னை (Chennai) மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


ALSO READ | பிரதமர் மோடியின் சென்னை பயணம்; கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் முழு விபரம்!


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் (TN Assembly Election) நெருங்கிவரும் சூழலில் 4,486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). மேலும் 3,640 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. புதிய சேவையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR