கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது மகன் அருண்குமார் (24) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்பட்ட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு தடையா? போலீசாரின் செயலால் வலுக்கும் சர்ச்சை!


நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக நண்பர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து, அதில் அருண்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருண்குமார் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.


மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், ஆம்புலன்ஸில் செல்லும்போதே அருண்குமார் உயிரிழந்துவிட்டார் என்று தெரிகிறது.


மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?


பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி எடுத்ததால், இது ஃபுட் பாய்சனா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உயிரிழப்புக் குறித்து பல்வேறு கோணங்களில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம், கிருஷ்ணகிரி மாவடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | நெருப்புடன் விளையாடும் விஞ்ஞானிகள்! 80% இறப்பு விகிதம் கொண்ட புதிய கொரோனா வைரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ