இந்த கேமிங் செயலிகளை டவுண்லோட் செய்யாதீர்கள்! மிகவும் ஆபத்தானது -எச்சரிக்கும் அவாஸ்ட்
Google Play Store இலிருந்து இந்த கேமிங் செயலிகளை பதிவிறக்கி இருந்தால், உடனடியாக அகற்றினால், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.
Technology News: நாம் பயன்படுத்தும் பல செயலிகள் நமது வேலையை எளிதாக்குவது போல, சில செயலிகள் நம்மை சிரமத்திற்குள்ளாக்குகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) இதுபோன்ற சுமார் 21 கேமிங் செயலிகள் உள்ளன. இது பற்றி வைரஸ் தடுப்பு நிறுவனம் அவாஸ்ட் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் 19 செயலிகள் தீங்கு விளைவிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களிலிருந்து இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்குமாறு அவாஸ்ட் அறிவுறுத்தியுள்ளது. இந்த தீங்கு விளைவிக்கும் செயலிகளின் பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கேம் பிரியர்களுக்கு எச்சரிக்கை!
ப்ளே ஸ்டோரில் 19 கேமிங் செயலிகள் மொபைல் பிரியர்களுக்கு ஆபத்தானவை என்று அவாஸ்ட் கூறியுள்ளது. ஏனெனில் அவற்றில் ஆட்வேர் (விளம்பரங்களை அடிக்கடி காட்டும் போலி கேம் செயலி) உள்ளது. இந்த செயலிகளில் உள்ள ஆட்வேர் (Adware) மறைக்கப்பட்ட விளம்பரங்கள் குடும்பத்தைச் (HiddenAds) சேர்ந்தவை. இந்த விளம்பரங்கள் கேம் பிரியர்களுக்கு சிக்கல்களை உருவாக்கும்.
ALSO READ | இனி கூகிள் பிளேஸ்டோருக்கு டாட்டா.... அறிமுகமானது Paytm Mini செயலி...!
HiddenAds தொடர்புடைய இந்த 21 கேமிங் செயலிகள் குறித்து, இந்த வார தொடக்கத்தில் அவாஸ்ட் அறிவித்தது. ஆனாலும் இந்த 21 கேமிங் செயலிகளை பற்றி கூகுள் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் பகிரவில்லை.
இந்த செயலிகள் ஆபத்தானவை!
Shoot Them, Crush Car, Rolling Scroll, Helicopter Attack - NEW, Assassin Legend - 2020 NEW, Helicopter Shoot, Rugby Pass, Flying Skateboard, Iron it, Shooting Run, Plant Monster, Find Hidden, Find 5 Differences - 2020 NEW, Rotate Shape, Jump Jump, Find the Differences - Puzzle Game, Sway Man, Desert Against, Money Destroyer, Cream Trip - NEW, Props Rescue
இந்த மூன்று செயலிகளை உடனடியாக அகற்றுங்கள்!
பிளே ஸ்டோரில் தரவைத் திருடும் மூன்று மொபைல் செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊடக அறிக்கையின்படி, இந்த தகவலை ஐடிசிஏ (IDCA) வழங்கியுள்ளது.
ALSO READ | Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google
இந்த மூன்று செயலிகள் Cats & Cosplay, Number Coloring மற்றும் Princess Salon ஆகும். இந்த மூன்று செயலிகளும் 20 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று செயலிகளும் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த பயன்பாடுகளை அகற்றினால், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR