Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google

கடந்த இரண்டு மாதங்களில், 34 செயலிகளில் ஒரு குறிப்பிடத்தக்க Malware கண்டறியப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 03:48 PM IST
  • 34 மொபைல் செயலிகளை Google தடை செய்துள்ளது.
  • Joker Malware என்பது ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை குறிவைக்கும் ஒரு வகையான குறியீடாகும்.
  • Joker Malware கூகிளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, இந்த செயலிகளுடன் மொபைலில் நுழைந்து விடுகிறது.
Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google title=

புதுடெல்லி: உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) மோசடி செய்து குந்தகம் விளைவிக்கக்கூடிய 34 மொபைல் செயலிகளை கூகிள் (Google) தடை செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இந்த அனைத்து செயலிகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க Malware கண்டறியப்பட்டுள்ளது. இவை கூகிளின் பாதுகாப்பையும் ஏமாற்றி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் வல்லமை படைத்தவை.

Joker Malware ஆபத்து:  

ஆங்கில வலைத்தளமான indianexpress.com-ன் படி, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஜோக்கர் மால்வேரின் 34 மொபைல் செயலிகளை (Mobile Apps) கூகிள் தடை செய்துள்ளது. அறிக்கையின்படி, Joker Malware என்பது ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை குறிவைக்கும் ஒரு வகையான குறியீடாகும்.  

கலிபோர்னியாவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஸ்கேலர் (Zscaler) இந்த புதிய ஜோக்கர் மால்வேரை கண்டுபிடித்துள்ளது. உங்கள் மொபைலில் இந்த 34 செயலிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அதை உடனடியாக Uninstall செய்யுமாறு நிறுவனம் பயனர்களிடம் கூறியுள்ளது.

ALSO READ: Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!

அந்த 34 செயலிகளின் பட்டியல் இதோ:

All Good PDF Scanner

Mint Leaf Message-Your Private Message

Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons

Tangram App Lock

Direct Messenger

Private SMS

One Sentence Translator – Multifunctional Translator

Style Photo Collage

Meticulous Scanner

Desire Translate

Talent Photo Editor – Blur focus

Care Message

Part Message

Paper Doc Scanner

Blue Scanner

Hummingbird PDF Converter – Photo to PDF

All Good PDF Scanner

com.imagecompress.android

com.relax.relaxation.androidsms

com.file.recovefiles

com.training.memorygame

Push Message- Texting & SMS

Fingertip GameBox

com.contact.withme.texts

com.cheery.message.sendsms (two different instances)

com.LPlocker.lockapps

Safety AppLock

Emoji Wallpaper

com.hmvoice.friendsms

com.peason.lovinglovemessage

com.remindme.alram

Convenient Scanner 2

Separate Doc Scanner

இந்த செயலிகள் உங்கள் வங்கிக் கணக்கை காலியாக்குகின்றன

ஒரு பயனர் ஒரு சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்துள்ளார் என வைத்துக்கொள்வோம். Joker Malware கூகிளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, இந்த செயலிகளுடன் மொபைலில் நுழைந்து விடுகிறது. அதன் பின்னர், சப்ஸ்க்ரிப்ஷன் முடிவடைந்தாலும், உங்களுடைய அகௌண்டிலிருந்து பணம் கழிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த மால்வேர் உங்கள் எஸ்எம்எஸ் மற்றும் OTP-ஐ தானே எடுத்துக் கொண்டு பயன்படுத்துகிறது.

ALSO READ: iPhone 12 Mini, iPhone 12 Max: எத்தனை inch? எப்போது launch? விவரம் உள்ளே......

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News