Best Electric SUV: ஹுண்டாய் IONIQ 5-ன் அசத்தும் சிறப்பம்சங்கள், விவரம் இதோ
Hyundai Ioniq 5, BEW இயங்குதளத்தில் உருவாக்கப்படும் நடுத்தர அளவிலான மின்சார SUV ஆகும்.
Best Electric SUV : ஹூண்டாய் கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அக்டோபர் 2021 இல், ஹூண்டாய் நிறுவனம் சப்-காம்பாக்ட் SUV பிரிவில் சிறப்பாக செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) சிறந்த விற்பனையான காராக உள்ளது. இந்த பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் இந்த வெற்றிக்குக் காரணம், புதிய தோற்றம் மற்றும் அம்சங்களில் நடைபெறும் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் புதுப்பித்தல்கள்தான். ஹூண்டாயின் அத்தகைய பிரத்யேக கார்களில் ஒன்று Ioniq 5 electric SUV ஆகும். இருப்பினும், இந்த காரின் அறிமுகம் குறித்த விவரம் இன்னும் தெளிவாக இல்லை.
சமீபத்தில், ஹூண்டாய் இந்தியாவின் தலைமையகத்தில் இந்த காரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டுமா இல்லையா? இந்த காரின் சிறப்பு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
BEW பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் ஒரே மின்சார SUV
Hyundai Ioniq 5, BEW இயங்குதளத்தில் உருவாக்கப்படும் நடுத்தர அளவிலான மின்சார SUV ஆகும். புதிய இயங்குதளம் அதை மேம்பட்ட அளவில் எடுத்துச்செல்கிறது. ஏனெனில் மின்சார கார்கள் (Electric Car) குறைவான பாகங்களைக் கொண்டிருக்கும். இவை இவற்றின் குறுகிய வெளிப்புறத்தின் கீழ் நீண்ட வீல்பேஸ்களைக் கொண்டிருக்கும். இருப்பினும், இது Hyundai Ioniq 5 இல் இல்லை. மற்ற மின்சார கார்களுடன் ஒப்பிடுகையில் இது பெரியதாகத் தெரியும். இதன் உட்புறம் பெரியதாகவும் அதிக இடம் கொண்டதாகவும் இருக்கிறது.
அற்புதமான வடிவமைப்பு
வடிவமைப்பிலும், Hyundai Ioniq 5 மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. மற்ற ஹூண்டாய் கார்களை விட இது சிறந்ததாகவும் உள்ளது. இந்த காரில், சதுர டெயில்-லேம்ப்கள், முன்பக்க பம்பரில் வித்தியாசமான வெட்டுக்கள் மற்றும் வெவ்வேறு வீல் டிசைன்கள் கொண்ட பெரிய கிராஸ்ஓவர் போல் இருக்கும் என தெரிகிறது.
ALSO READ:Most Beautiful Car: இந்தியாவில் இதன் விலை, பிற விவரங்கள் இதோ
அதன் இண்டீரியரும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் ஒரு மூவபிள் சென்டர் கன்சோல், ஃபர்ஷ் பிளேட் ஆகியவை உள்ளன. முன் இருக்கையை எலக்ட்ரானிக் முறையில் சரிசெய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பில் ஈகோ பெஸ்ட் அடிப்படையிலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, உள்ளே டிரைவருக்கு 12 இன்ச் தொடுதிரை மற்றும் 12 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
480 கிமீ தூரம் வரையிலான ரேஞ்ச்
அதன் எஞ்சின் பற்றி பேசுகையில், இது 58kWh மற்றும் 72.6kWh மோட்டார்கள் கொண்ட இரண்டு வகைகளில் வருகிறது. இந்த இரண்டு மோட்டார்களின் வரம்பு 470 முதல் 480 கி.மீ வரை ஆகும். இந்த கார் டெஸ்லாவின் Y மாடலுக்கு போட்டியாக உள்ளது. உலக சந்தையில் இதன் விலை சுமார் ரூ.37 லட்சம் ஆகும்.
உலகின் பல நாடுகளில் இதற்கான அதிக தேவை உள்ளது
தற்போது இந்த கார் (Car) உலகின் பல நாடுகளில் கிடைக்கிறது. இந்த நாடுகளில் இந்த காருக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், இத்தகைய காரை நிறுவனம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தக்கூடும். இந்த காரின் விலை சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கார் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இது மிகச்சிறந்த வரம்பையும் கொண்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை Kona EV-க்கு மேலான நிலையில் வைக்ககூடும்.
ALSO READ: Honda SUV: முன்னணி கார்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்கும் புதிய ஹோண்டா கார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR