காதலனின் தாடி உங்களுக்கு பிடிக்கவில்லையா... தள்ளுபடியில் கிடைக்கும் டிரிம்மர்களை பரிசளிக்கலாம்!
Valentines Day 2024: காதலர் தினத்தில் உங்கள் காதலனுக்கு டிரிம்மர் பரிசளிக்க வேண்டும் என நினைத்தால் இந்த 5 மாடல்களை நீங்கள் காணலாம்.
Trimmers For Valentines Day 2024: காதலர் தினம் நெருங்கிக்கொண்டே வருகிறது. எனவே, காதலர்கள் தங்களின் இணையருக்கு பரிசளிக்க தங்களின் மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பார்கள். அதிலும், குறிப்பாக பெண்கள் தங்களின் காதலருக்கு எதாவது புதிதாக பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக பல யோசனைகளிலும் இருப்பார்கள்.
மேலும், இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், ப்ளூடூத் இயர்போன் போன்றவற்றை காதலனுக்கு பரிசாக அளிக்க நினைப்பார்கள். இருப்பினும், காதலனின் தேவையை அறிந்து பரிசளிப்பது நல்லதுதானே. மேலும், உங்களுக்கு உங்கள் காதலனின் தாடி, மீசை பிடிக்கவில்லை என்றால் டிரிம்மரை பரிசாக கொடுத்து மறைமுகமாகவும் அதை எடுக்கும்படி கூறலாம்.
அந்த வகையில், உங்கள் காதலனுக்கு டிரிம்மர் தேவையாக இருந்தால் அமேசான் விற்பனையில் கிடைக்கும் இந்த 5 மாடல்களை நீங்கள் பரிசளிக்கலாம். அமேசானில் பல பிராண்டுகளில் தள்ளுபடிகளில் கிடைக்கும் டிரிம்மர்களை இங்கு காணலாம். மேலும், அதன் அம்சங்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!
Morphy Richards's Kingsman Pro
இந்த பாடி டிரிம்மர் அமேசானில் 1,599 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் டி பிளேடு, துல்லியமான இணைப்பு, யு பிளேடு, பாடி க்ரூமர் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். இது 12-இன்-1 டிரிம்மர் ஆகும். இது நீண்ட நேரம் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Zlade Ballistic Lite Manscaping
இந்த பாடி டிரிம்மர் அமேசானில் 1,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதாவது, 40 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில் கம்பியில்லா வடிவமைப்பு உள்ளது. மேலும், AAA பேட்டரிகளில் இயங்குகிறது. இது ஸ்மார்ட் டிராவல் லாக், 3-வினாடி நீண்ட அழுத்த பட்டன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
Bombay Shaving Company Beard Trimmer
பாம்பே ஷேவிங் கம்பெனி, ஆண்களுக்கான தாடி டிரிம்மர் அமேசானில் இதன் 929 ரூபாய்க்கு கிடைக்கும். அதாவது, 23 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த டிரிம்மர் 38-நீள அமைப்புகளுடன் வருகிறது. குறிப்பாக, கம்பியில்லா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 120 நிமிட ரன் டைம் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் வழியாக வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவைக் கொண்டுள்ளது.
Xiaomi Mi Beard Trimmer
Xiaomi நிறுவனத்தின் ஆண்களுக்கான Mi Beard Trimmer 2C ஆனது அமேசானில் 1,099 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இது தற்போது 45 சதவீதம் ஆகும். டிரிம்மர் உயர் துல்லியமான டிரிம்மிங்கை வழங்குவதாக கூறப்படுகிறது. இது 40 நீள அமைப்புகளையும் 90 நிமிட ரன் டைமை கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது.
Philips Multi Grooming Kit 9-in-1
இந்த டிரிம்மர் அமேசானில் 1,594 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை 1,995 ரூபாயாகும், அதன்படி 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது 8 வெவ்வேறு இணைப்புகளுடன் வருகிறது. டிரிம்மரின் ரன் டைம் 60 நிமிடங்களாகும்.
மேலும் படிக்க | AI மூலம் வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞர் - இது எப்படி சாத்தியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ