AI மூலம் வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞர் - இது எப்படி சாத்தியம்?

ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிண்டரில் 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மத்தியில் தனக்கான மனைவியை தேர்வு செய்தது எப்படி என்ற அனுபவத்தை கணினி பொறியாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2024, 09:01 PM IST
  • இந்த இளைஞர் ChatGPT-ஐ பயன்படுத்தி 5000 பேரை மேட்ச் செய்துள்ளார்.
  • குறிப்பாக, ChatGPTக்கு தன்னை போன்று எப்படி பேச வேண்டும் என இவர் கற்றுக்கொடுக்கவில்லை.
  • நாளாக நாளாக பேசி பேசி ChatGPT அந்த இளைஞரை போன்ற பேச தொடங்கியிருக்கிறது.
AI மூலம் வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞர் - இது எப்படி சாத்தியம்? title=

தற்போதைய காலகட்டத்தில் டேட்டிங் செய்வது என்பது செயலிகள் மூலம் என்றாகிவிட்டது. இணைய சமூகம் தங்களின் காதலை பேஸ்புக், ட்விட்டரில் தொடங்கிய நிலையில் தற்போது அவை டிண்டர், பம்பிள் என வந்துள்ளது. பள்ளி, கல்லூரி, டைப்ரைட்டிங் கிளாஸ், டியூஷன் கிளாஸ், பஸ் ஸ்டாண்ட், கோவில் என பொது இடங்களில் காதலை வளர்த்து வந்த தலைமுறை போய், ஸ்மார்ட்போனிலேயே ஸ்மார்ட்டாக டேட்டிங் செய்யும் தலைமுறை வந்துவிட்டது. 

இதையெல்லாம் பார்க்கும்போது 90s கிட்ஸ் புலம்புவது புரிகிறது என்றாலும், இந்த GenZ தலைமுறையும் எதையும் பெரிதாக மாற்றிவிடவில்லை என்பதே நிதர்சனம். எளிதான ஒன்றையும் இடியாப்பச் சிக்கலாக மாற்றுவது GenZ தலைமுறைக்கு கை வந்த கலையாகிவிட்டது. அதேபோல்தான், எளிமையாக தெரியும் இந்த ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரத்திலும் பல சிக்கல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த GenZ தலைமுறை.

5000 பெண்கள்

இது ஒருபுறம் இருக்க, உலகமே ஒரு தொழில்நுட்பத்தை பார்த்து ஒரே நேரத்தில் பயந்தும், வியந்தும் வருகிறது என்றால் அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்தான். இது பல லட்சக்கணக்காணோரின் வேலையை பறிக்க உள்ளது, பறித்துக்கொண்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், அனைவரும் இந்த AI சார்ந்த நுட்பங்களை அறிந்துகொள்ளும் முனைப்பில் உள்ளனர், அதனை தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தவும் முயல்கின்றனர். 

மேலும் படிக்க | Google Bard AI இப்போது புகைப்படங்களை இலவசமாக உருவாக்குகிறது..! உதாரணம் இங்கே.!

அதாவது, ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் சுமார் 5000க்கும் மேற்பட்ட பெண்களுடன் டிண்டர் செயலியில் இணக்கமாகி உள்ளார். மேலும், அதில் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் அந்த 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மத்தியில் தனது தற்போதையை மனைவியையும் ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. 

காதலை கண்டுபிடிப்பது எப்படி?

23 வயதான அலெக்சாண்டர் ஜாடா என்ற ரஷ்ய நாட்டு கணினி பொறியாளர் தனது X பக்கத்தில்,"ஒரு வருடமாக ChatGPT மூலம் டிண்டர் வாயிலாக பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தேன். அதன்மூலம், ChatGPT 5239 பெண்களை இணங்கண்டு அவர்களுக்கு எனக்கு ஏற்றவர்கள் இல்லை என்பதால் அனைவரையும் நீக்கி, எனக்கேற்ற ஒருவரை மட்டும் கண்டுகொண்டது. அத்தகைய அமைப்பை நான் எவ்வாறு உருவாக்கினேன், என்னென்ன பிரச்சனைகள் இருந்தன, மற்ற பெண்களுடன் என்ன நடந்தது என்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 

மேலும், அந்த பதிவில்,"உங்களுக்கு பொருத்தமான ஜோடியை கண்டுகொள்வது மிக கடினம். எனக்கு எனது வேலை, பொழுதுபோக்கு, கற்றல் மற்றும் சமூக செயல்பாடு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். ChatGPT இல்லாமல் கூட எனக்கான துணையை என்னால் கண்டைந்திருக்க முடியும். ஆனால், அதற்கு அதிக நேரமும், அதிக பணமும் செலவாகியிருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.

மனமுறிவில் இருந்து மீண்டது எப்படி?

இவர் தனது கதையை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதன் சுருக்கத்தை தொடர்ந்து காணலாம். அதாவது, அலெக்சாண்டர் ஒரு பெண்ணுடன் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரேக் அப் ஆகியுள்ளது. எனவே, புதிய உறவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என அலெக்சாண்டருக்கு விருப்பம். ஆனால், மீண்டும் தனது காதலையும், நேரத்தையும் யார் என்ற தெரியாத புதிய பெண்ணிடம் செலவிட அவருக்கு விருப்பமில்லை. 

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரிங்களில் பல டிண்டர் டேட்டிங்கள் தோல்வியில் முடிந்ததால், அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் துவண்டு போயுள்ளார். அப்போது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என அலெக்சாண்டர் முடிவெடுத்துள்ளாரப். அப்போதுதான், ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிண்டரில் பெண்களஇடம் பேசியுள்ளார்.

மனைவியை கண்டுபிடித்த ChatGPT

இருப்பினும், ChatGPT தொழில்நுட்பத்திற்கு தன்னை போன்று எப்படி பேச வேண்டும் என அவர் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்ததாகவும், ChatGPTக்கு தனது பாணி புரியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதனால், முதிர்ச்சியற்ற பேச்சுகளே ChatGPT மூலம் பெற்றதாகவும் அலெக்சாண்டார் கூறினார். 

நாள்கள் செல்ல செல்ல, ChatGPT தொழில்நுட்பத்திற்கு தனது பேச்சைப் பிரதிபலிக்கும் முறையை பயிற்றுவித்ததாக கூறுகிறார். அதன்மூலம், தற்போதைய அவரின் மனைவி கரினாவை கண்டடைந்துள்ளார். கரினாவுக்கு தான் முதலில் AI உடன் பேசுகிறோம் என்பதே தெரியவில்லையாம். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்த பின்னரும், அதனை அமைதியாக கடந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | காவு வாங்கும் AI... அச்சுறுத்தும் பணிநீக்கம்... அடுத்த அதிரடிக்கு தயாராகும் கூகுள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News