Best Electric Scooters: வரவிருக்கும் நாட்களில் அறிமுகமாகவுள்ள மின்சார ஸ்கூட்டர்கள்
பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
Electric Scooters: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
சமீபத்தில், ஓலா எஸ் 1 மற்றும் சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்கள் சிறந்த பேட்டரி வரம்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இது ஒரு ஆரம்பமே. வரும் நாட்களில் இன்னும் பல மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்:
ஹீரோ மோட்டோகார்ப்
- ஹீரோ மோட்டார் கார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் மின்சார வாகன சந்தையில் அறிமுகம் ஆகவுள்ளது.
- அதன் விலை குறைவாகவும், பேட்டரி வரம்பு அதிகமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- நிறுவனம் சமீபத்தில் தைவானைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பாளர் கோகோரோவுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.
- இப்போது இந்த இரு வாகனங்களும் இணைந்து நுழைவு நிலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறார்கள்.
ALSO READ: 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்
ஆக்டிவா எலக்ட்ரிக்
- ஹோண்டாவும் (Honda) தனது முதல் மின்சார ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.
- இந்த புதிய ஸ்கூட்டர் ஆக்டிவா எலக்ட்ரிக் என்று பெயரிடப்படக் கூடும்.
- இந்த மின்சார ஸ்கூட்டரின் வரம்பு மிகவும் நன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
டிவிஎஸ்
- டிவிஎஸ் (TVS) மோட்டார் நிறுவனம் விரைவில் TVS Creon என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 100 கிமீ வரை இயங்க முடியும் என்று இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரைப் பற்றி சொல்லப்படுகிறது.
- ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூபை (TVS iQube ) அறிமுகம் செய்துள்ளது. அது மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சுசுகி பர்க்மேன் எலக்ட்ரிக்
- சுசுகி நிறுவனம், Suzuki Burgman-ன் மின்சார வாகன வகையான Suzuki Burgman Electric-ஐ அறிமுகம் செய்யவுள்ளது.
- இந்த ஸ்கூட்டர் 4G இணைப்புடன் அறிமுகம் செய்யப்படக்கூடும்.
- இந்த மின்சார வாகனத்தின் பேட்டரியின் வரம்பும் 100 கிமீ வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ALSO READ: Ola Electric Scooter விற்பனையில் சிக்கல்: இந்த தேதியில் விற்பனை துவங்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR