TVS NTorq 125 Race XP: இந்தியாவில் அறிமுகமானது TVS நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர்

டி.வி.எஸ் நிறுவனம் தனது புதிய பதிப்பான TVS NTorq 125 Race XP-ஐ இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 12:13 PM IST
  • டி.வி.எஸ் நிறுவனம் தனது புதிய பதிப்பான TVS NTorq 125 Race XP-ஐ இன்று அறிமுகப்படுத்தியது.
  • எப்போது துடிதுடிப்புடன இருக்கும் 'Always-on GenZ'-க்கு ஒது மிகவும் ஏற்ற வண்டியாக இருக்கும்.
  • இதில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கனனெக்ட் இணைப்பு அமைப்பு உள்ளது.
TVS NTorq 125 Race XP: இந்தியாவில் அறிமுகமானது TVS நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் title=

TVS NTorq 125 Race XP: TVS NTorq 125 Race XP பதிப்பு இந்தியாவில், ரூ.83,275 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சந்தையில் பிரபலமான 125 சிசி ஸ்கூட்டரின் இந்த சிறப்பு பதிப்பு, அடிப்படையில் அதே பழைய என்டோர்க் 125 போன்றதுதான். இருப்பினும் இதில் புதிய வண்ணங்கள், இரண்டு ரைடிங் முறைகள் மற்றும் வேறு சில வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பில் இயந்திர மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இந்த ஸ்கூட்டரும் முந்தையதைப் போல, அதே 124.8 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. எனினும் இதில் சில மேம்பாடுகளும் உள்ளன. 

இரு சக்கர உற்பத்தியாளரான டி.வி.எஸ் (TVS) இந்த பதிப்பில் ஸ்கூட்டரின் வாயு ஓட்ட இயக்கவியல் (gas flow dynamics ) மற்றும் எரிப்பு செயல்முறைகளை (combustion processes) புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இதன் விளைவாக, இந்த மாடலில் இதன் முந்தைய பதிப்பை விட 0.81 bhp அதிகமாக உள்ளது.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்டின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) அனிருத்தா ஹல்தார் கூறுகையில், "TVS NTorq 125 இந்தியாவில் ஸ்கூட்டரிடம்  (Scooter) இருக்கும் எதிர்பார்ப்பை மறுவரையறை செய்துள்ளது. எப்போதும் உலக நடப்புகளுடன் தொடர்பில் இருக்கும் Gen Z-க்கு இது அற்புதமான, சக்திவாய்ந்த, இணைப்பு வசதிகள் கொண்டுள்ள ஸ்கூட்டர்களுக்கான போக்கை கொண்டு வந்துள்ளது. TVS NTorq 125-ஐ அறிமுகம் செய்வதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

ALSO READ: TVS Motor 'Easy to Buy at Rs.49 a day' திட்டம்: இதை விட மலிவா வாங்க முடியுமா?

இது இந்த பிரிவில் மிக உயர்ந்த சக்தி, ஃபர்ஸ்ட்-இன்செக்மெண்ட் இரட்டை சவாரி முறைகள், அதிக வேகத்தையும் உயர்ந்ததையும் வழங்கும் திறன், மேம்பட்ட உறுதி ஆகிய அம்சங்களுடன் வருகிறது. பொறியியல் மற்றும் நுகர்வோர் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் நாங்கள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகள், உயர் வலிமை எஃகு மற்றும் தொடர்ச்சியான கணினி உதவி வடிவமைப்பு உருவகப்படுத்துதலை மேம்படுத்தும் பிற உலோகக்கலவைகள் போன்றவற்றின் மூலம் இது சாத்தியமானது.  சிவப்பு உலோகக் கலவைகளுடன் கூடிய புதிய தோற்றம் இந்த ஸ்கூட்டரின் அமைப்பை நிறைவு செய்கிறது. எப்போது துடிதுடிப்புடன இருக்கும் 'Always-on GenZ'-க்கு ஒது மிகவும் ஏற்ற வண்டியாக இருக்கும்.” என்றார்.

TVS NTORQ 125 ரேஸ் எக்ஸ்பி பதிப்பின் அம்சங்கள்: 

இதில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கனனெக்ட் இணைப்பு அமைப்பு உள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ஸ் அசிஸ்ட் அம்சம் ரைடர்ஸ் இணைப்பு அம்சங்களை முறையாக பயன்படுத்த உதவுகிறது. இதனால் 15 வெவ்வேறு வாய்ஸ் கமாண்டுகளை ஏற்க முடியும். 

Race XP's-யின் மோட்டார் 7,000 ஆர்பிஎம்மில் 10.06 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் உச்ச முறுக்குவிசையை உருவாக்கிறது.

ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News