ஏர்டெல் வருடாந்திர திட்டம்: நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்து, ஒவ்வொரு மாதமும் உங்கள் ஃபோனை ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், அத்தகைய ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். இதில் நீங்கள் 365 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யவே தேவையில்லை. இந்த சலுகை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும், அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஒரு ப்ரீபெய்டு வாடிக்கையாளராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கும் சிறந்ததாக இருக்கும், மேலும் இதில் கிடைக்கும் பலன்களை தெரிந்துக்கொண்டால் கட்டாயம் அதிர்ச்சியாடந்துவிடுவீர்கள். ஏனெனில் இதில் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் விலையும் மிகவும் சிக்கனமானது. எனவே இந்த திட்டத்தின் விலை மற்றும் அதில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதை இப்போது நாம், அறிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு என்ன?
இன்று நாம் காண உள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 2999 ஆகும். இது ஒரு வருட கால வேலிடிட்டியுடன் வரும் திட்டமாகும், மேலும் பலன்கள் மிக அதிகம், அத்துடன் இதில் கிடைக்கும் டேட்டாவும் மிக அதிகமாக இருப்பதால், உங்கள் இணையம் தொடர்பான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் மற்ற திட்டங்களில் வழங்கப்படாத பல நன்மைகளை இந்த திட்டத்தில் நீங்கள் காணலாம்.


மேலும் படிக்க | AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி


ரூபாய் 2999 ரீசார்ஜ் திட்டம்
இந்தத் திட்டத்தின் விலை ரூபாய் 2999 ஆகும் மற்றும் பலன்களைப் பற்றி பேசுகையில், முதலில் 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இதனுடன், நாட்டில் எங்கிருந்தும் நீங்கள் வரம்பற்ற அழைப்புகளைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் பலன்கள் இத்துடன் முடிந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், அது தவறு, ஏனெனில் இதில் உங்களுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதனுடன், Apollo 24 7 வட்டச் சந்தா, இலவச ஹலோ ட்யூன்ஸ், இலவச Wynk மியூசிக் மற்றும் Fast Tack இல் ரூபாய் 100 கேஷ்பேக் உள்ளிட்ட சில கூடுதல் நன்மைகளும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும்.


மேலும் படிக்க | Google Bard: சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு ஏஐ லாகின் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ