ஏஐ தொழில்நுட்பம் இணைய உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருகிறது. சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் டெக் உலகில் இது தொடர்பான போட்டி புதிய உச்சத்தை தொட்டிக்கிருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக, கூகுள் இணையத்துக்கு போட்டியாக சாட்ஜிபிடி உருமாறியிருப்பதால், கூகுள் நிறுவனம் தொடக்கத்திலேயே விழித்துக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு-ஐ உருவாக்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். சாட்ஜிபிடி பல கோடி பயனாளர்களை பெற்று டெக் உலகில் இனி கூகுள் இடத்தை நிரப்பப்போகிறது என்ற பேச்சு வெகு சீக்கிரமே எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனமும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்ஜிபிடி-ஐவிட சிறப்பான தகவல்களை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் என தெரிவித்தார். அவர் கூறியதுபோலவே கூகுள் பார்டு இப்போது சோதனை முறையில் இருக்கிறது. பொதுவெளியில் அனைத்து தரப்பினரும் அணுகும் வகையில் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ கூகுள் பயனாளர்கள் மட்டுமே இப்போது கூகுள் பார்டு அணுகலை பெற்றுள்ளனர். அனைத்து தரப்பினரும் சோதனை முடிவுகளுக்கு பின்னர், அதாவது அதிகாரப்பூர்வ வெளியீடுகளுக்கு பின்னரே பெற்றுக் கொள்ள முடியும். இப்போது பொதுப் பிரிவினர் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பார்டு ஏஐ சாட்ஜிபிடி-ஐ பெற்றுக் கொள்ள முடியாது.
அதேநேரத்தில் கூகுள் பார்டு ஏஐ தொழில்நுட்பம் எப்போது வெளியிடப்படும் என்ற தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதிகபட்சம் இம்மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்திற்கு கூகுள் பார்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட்ஜிபிடி 2021 ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில், கூகுள் பார்டு லேட்டஸ்ட் தகவல்களையெல்லாம் உள்ளடக்கிய ஏஐ தொழில்நுட்பமாக இருக்கும் என கூறப்படுகிறது. சோதனை முடிவுகளில் கூகுள் பார்டு ஏஐ லேட்டஸ்ட் தகவல்களை ஒன்றிணைத்த முடிவுகளை கொடுப்பதாக கூகுள் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
மேலும் படிக்க | அமேசான் ChatGPT: கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி...!
மேலும் படிக்க | 107 ரூபாய்க்கு 60 நாட்களுக்கு வேலிடிட்டி, டேட்டா, இலவச அழைப்பு என அசத்தும் BSNL
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ