Komaki Venice மின்சார ஸ்கூட்டர்: அசத்தும் அம்சங்கள், ஃபுல் சார்ஜில் 120 கிமீ
கோமகி நிறுவனம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தனது ஐந்தாவது மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோமகி நிறுவனம் தனது அசத்தலான மின்சார குரூஸர் மோட்டார்சைக்கிளை கோமாகி ரேஞ்சர் என்ற பெயரில் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது.
இதனுடன், நிறுவனம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தனது ஐந்தாவது மின்சார இரு சக்கர வாகனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெனிஸ் என்ற மின்சார ஸ்கூட்டராகும் (Electric Scooter). கோமகி வெனிஸ் ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில், நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் ரெட்ரோ ஸ்டைலிங்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஜனவரி 26 முதல் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்று கோமாகி கூறுகிறது.
அருமையான ஸ்டைல் மற்றும் வடிவமைப்பு
பின்பக்கமாக, கோமாகி (Komaki) வெனிஸ் மின்சார ஸ்கூட்டர் வெஸ்பாவை ஒத்திருக்கிறது. அடுத்த பாகத்தில் உள்ள லோகோவும் பியாஜியோவைப் போலவே உள்ளது. இதனுடன், வட்டமான ஹெட்லேம்ப்கள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள், எல்இடி டெயில் லைட், முன்பக்க ஸ்டோரேஜ், ஃபா லெதரால் மூடப்பட்ட இருபக்க இருக்கைகள் பழைய ஸ்கூட்டர்களை நினைவூட்டுகிறது.
இது தவிர, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மற்றும் மியூசிக் சிஸ்டம் இணைப்பு, க்ரூஸ் கன்ட்ரோல், டபுள் ஃபிளாஷ், ரிவர்ஸ் மோட், பார்க்கிங் மோட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் என பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் செல்ஃப்-டைக்னாசிஸ் தொழில்நுட்பம், ஆண்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவற்றையும் பெறுவார்கள்.
ALSO READ | டோமினாரையும் பல்சரையும் கலங்க வைக்கும் யமஹாவின் சூப்பர் பைக் விரைவில் இந்தியாவில்!
வலுவான ரேஞ்ச்சுடன் 9 வண்ணங்களில் கிடைக்கும்
கோமகி வெனிஸ், பிரைட் ஆரஞ்சு, ப்யூர் வைட், ப்யூர் கோல்ட், ஸ்டீல் கிரே, ஜ்ட் பிளாக், ஐகானிக் எல்லோ, மற்றும் கிரானைட் ரெட் உட்பட 9 வண்ணங்களில் கிடைக்கிறது.
இது தவிர, இந்த ஸ்கூட்டர் மெட்டாலிக் ப்ளூ நிறத்தில் இரண்டு வெவ்வேறு ஷேடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் (Scooter) வழக்கமான 125 சிசி ஸ்கூட்டர்களைப் போலவே சக்தி வாய்ந்ததாக இருக்கும். இது 2.9 kW-R நவீன லித்தியம்-அயன் பேட்டரி பேக் மற்றும் 3 kW-r மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. சிபிஎஸ் டூயல் டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சிறந்த சஸ்பென்ஷனுடன் வெனிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | எலக்டிரிக் ஸ்கூட்டர் VS பெட்ரோல் ஸ்கூட்டர் - எது சிறந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR