ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் பலரும் பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கலாமா? அல்லது எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். விலை, தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சந்தேகம் எழுப்பும் அவர்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு இன்னும் எவ்வளவு நாள் மவுசு இருக்கும்? எலக்டிரிக் வாகனம் வாங்கினால் அதன் உதிரிபாகங்கள் எல்லா இடத்திலும் கிடைக்குமா? மெயின்டனனஸ் எப்படி? இருக்கும் என்ற கேள்விகள் பொதுவாக இருக்கின்றன.
அப்படியான குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு இரண்டு வாகனங்களிலும் இருக்கும் 2 மிக முக்கியமான சாதக பாதகங்களை பட்டியலிடுகிறோம். இதனடிப்படையில் எந்த வாகனத்தை வாங்கலாம் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
ALSO READ | இந்த சிம்கார்டுகளை இனி பயன்படுத்த முடியாது..!
1. விலை:
பொதுவாக பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை அதிகம். ஆனால் தற்போது மானியம் காரணமாக எலக்டிரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைந்துள்ளது. பல அரசாங்கங்கள் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குகின்றன. பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்ச்சூழல் பாதிப்பு அடிப்படையிலும் எல்டிரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அரசாங்கங்கள் ஊக்குவித்து வருகின்றன. இதனால், அந்த வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் நிலையில், பெட்ரோல் வாகனங்களுக்கு அத்தகைய மானியங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு எலக்டிரிக் வாகனங்களை வாங்குவதை பரிசீலிக்கலாம்.
ALSO READ | 35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு
2. பராமரிப்பு:
பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் எலக்டிரிக் வாகனங்களில் உபகரணங்கள் பழுது மிக குறைவு. மேலும், அந்த வாகனத்தின் பராமரிப்பு செலவும் பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெட்ரோல் வாகனங்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். எலக்டிரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் பேட்டரியை கட்டாயம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும். புதிய பேட்டரியை பொருத்திக் கொள்ளலாம் என்றாலும், அவற்றின் விலை மிகவும் காஸ்டிலியாக இருக்க வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR