ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்குவது மட்டுமல்லாமல், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால், உள்ளிட தினசரி தேவைகளுக்கான பல பொருட்களை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். கடைக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல ஆன்லைன் தளங்கள் தினசரி தேவைக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இதில் க்விக் காமர்ஸ் சேவை வழங்கும் சொமேட்டோவின் பிளின்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பேஸ்கெட், செப்டோ ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க அதிவிரைவு டெலிவரி, ஆஃபர்களை அவ்வப்போது நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த வகையில் இப்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் தனது க்விக் காமர்ஸ் சேவையை தொடங்கியுள்ளது. 


ரிலையன்ஸ் தங்கள் ஜியோமார்ட் செயலி மூலம் நவி மும்பை மற்றும் பெங்களூருவின் சில பகுதிகளில் இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனமும் பொருட்களை விரைவாக விநியோகிக்கும் கிவிக் காமர்ஸ் சந்தையில் நுழைய விரும்புகிறது. இதன் காரணமாக Zomato நிறுவனத்தின் Blinkit, Swiggy Instamart மற்றும் Big Basket போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.


ரிலையன்ஸ் நிறுவனம் முதலில் மளிகைப் பொருட்களை மட்டுமே வழங்கும் என்றாலும், பின்னர் ஆடைகள் மற்றும் சிறிய அளவிலான மின்னணு பொருட்களையும் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டிரெண்ட்ஸ் போன்ற அதன் ஸ்டோர்கள் மூலம், நிறுவனம் 10-15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் உள்ளது.


பிளின்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கடைகளைத் திறக்காமல், அதற்கு பதிலாக, அவர்கள் ஏற்கனவே இருக்கும் ஸ்டோர்களையும், கிராப் எனப்படும் டெலிவரி நிறுவனத்தையும் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களை கவர,  எவ்வளவு பொருட்களை வாங்கினாலும் டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் கட்டணம் மற்றும் சர்ஜ் கட்டணங்கள் போன்றவை வசூலிக்கப்படுவதில்லை. 


மேலும் படிக்க | Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?


சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இந்த வகை சேவைகள் அதிக இல்லாத நிலையில், அப்பகுதிகளில் விரிவுபடுத்த நிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது. சுமார் 1,150 சிறிய நகரங்கள் மற்றும் பிற நகரங்களிலும் சேவையை வழங்க  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 10,000 முதல் 12,000 வகையான பொருட்களை விற்க விரும்புகிறது.


பொருட்களை விரைவாக டெலிவரி செய்வதன் மூலமும், அதிக பொருட்களை விற்பதன் மூலமும் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட ரிலையன்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இருப்பினும், பெரிய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, 30 நிமிடங்களுக்குள் பொருட்களை வழங்குவது சவாலான பணி என்பதையும் மறுக்க இயலாது.


மேலும் படிக்க | விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ