புதுடெல்லி: ஆப்பிள் சமீபத்தில் தனது ஐபோன் 12 தொடரை அறிமுகப்படுத்தியது. 5ஜி திறன்களைக் கொண்ட முதல் ஐபோன் தொடர் இதுவாகும். இந்த தொலைபேசி மிகவும் அதிகம் விற்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இதில் 5G மற்றும் 4G வேகத்தில் மாறுபாடு உள்ளது தெரியவந்துள்ளது.


ஆப்பிள் (Apple) தனது 'நாடு தழுவிய 5 ஜி' நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 13 அன்று ஆப்பிள் ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் இந்த அம்சத்தை குறிப்பாக வலியுறுத்தியது.


இந்த அமைப்பு டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வு (Dynamic Spectrum Sharing -DSS)ஐ அடிப்படையாகக் கொண்டது. இதில் 5ஜி கவரேஜுக்கு 4ஜி சேனல்கள் பயன்படுத்தப்படுகிறது.


இந்த ஸ்பெக்ட்ரமில் 4ஜி எல்டிஇ (4G LTE)நெட்வொர்க்குடன் ஒப்பிடுகையில் இண்டெனெட் வேகம் குறைவாக உள்ள்து கண்டறியப்பட்டது. பிசி மேக் PC Mag test சோதனையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வு (DSS) இல் சிக்கல் இருப்பதாக பிசி மேக் சோதனை கூறுகிறது. இது ஏற்கனவே உள்ள  பிரத்யேக இண்டர்னல் சேனல்களைப் பயன்படுத்துகிறது என கூறப்படுகிறது.


ஆமெரிக்கா (America) நியூயார்க் நகரில் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளுக்கு இடையில் இண்டெர்நெட் வேகத்தில் உள்ள மாறுபாட்டை கண்டறிய எட்டு வெவ்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டது.


5 ஜி 5G UWB சபோர்ரடை கொண்ட ஒரே ஒரு இருப்பிடத்தைத் தவிர, 4G LTE உடன் ஒப்பிடும்போது DSS 5G தொடர்ந்து, குறைந்த வேகத்தையே வழங்கியது.


வெரிசோன் ஒரு அறிக்கையில், “பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு, எங்கள் 5G  நாடு தழுவிய நெட்வொர்க்கில் செயல்திறன் 4G க்கு ஒத்ததாக இருக்கும்.


டி.எஸ்.எஸ் என்பது புதிய தொழில்நுட்பம், நாங்கள் அதை தொடர்ந்து உபயோகத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கிறோம். 2021 மற்றும் அதற்கு அப்பால் செயல்திறன் மேம்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று வெரிசோன்  நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | பகீர் ரிபோர்ட்: இஸ்ரேல் கம்பெனி Pegasus Spyware மூலம் ஐபோன்களை ஹாக் செய்துள்ளது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR