பகீர் ரிபோர்ட்: இஸ்ரேல் கம்பெனி Pegasus Spyware மூலம் ஐபோன்களை ஹாக் செய்துள்ளது

கிஸ்மெட் (KISMET) எனப்படும்  ஒரு சாஃப்வேர் மூலம் முக்கிய பத்திர்க்கையாளர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2020, 01:45 PM IST
  • இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ (NSO) (குழுமத்தால் உருவாக்கப்பட்டது பெகாசஸ் ஸ்பைவேர்.
  • முக்கிய பத்திரிக்கையாளர்களின் ஐபோன்கள் ஹாக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
  • ஐபோன் இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து வருகிறது.
பகீர் ரிபோர்ட்: இஸ்ரேல் கம்பெனி Pegasus Spyware மூலம் ஐபோன்களை ஹாக் செய்துள்ளது title=

இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ (NSO)  (குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware), மூலம் சுமார் 12 பத்திரிகையாளர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கனடாவை தளமாகக் கொண்ட சிட்டிசன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். 

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அல் ஜசீரா  (Al-Jaseera) பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான 36 தனிப்பட்ட தொலைபேசிகளை ஹேக் செய்ய அரசு நிர்வாகிகள் என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தினர் என கூறப்படுகிறது. இது தவிர லண்டனை தளமாகக் கொண்ட அல் அராபி டிவியில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளரின் தனிப்பட்ட தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கிஸ்மெட் (KISMET) எனப்படும்  ஒரு சாஃப்வேர் மூலம் முக்கிய பத்திர்க்கையாளர்களின் ஐபோன்கள்(iPhone)  ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ | இந்தியா மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும்.. அஞ்சி நடுங்கும் இம்ரான் கான்..!

 

தற்போது, NSO குழுமம்  மற்றும் பேஸ்புக் (Facebook)  இடையில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இஸ்ரேலிய ஸ்பைவேர் தயாரிப்பாளர் பெகாசஸ் என்னும் ஸபை வேரை  வாட்ஸ்அப்பில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 1,400 வாட்ஸ்  அப் பயனாளர்களின் கணக்குக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பானோர் பிரபலங்கள். இஸ்ரேலிய நிறுவனம், அதன் சர்ச்சைக்குரிய உளவு மென்பொருள் பெகாசஸ் மூலம்  கடந்த ஆண்டு குறைந்தது 1,400 வாட்ஸ்அப் பயனர்களை ஹேக்கிங் செய்தது தொடர்பான ஆதாரங்களை பேஸ்புக்  (Facebook) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய iOS 14 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில்  KISMET என்னும் சாஃப்வேரை கொண்டு ஹாக் செய்ய முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து iOS சாதனங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனது ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்ய வேண்டும் எனவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இத்தாலி (Italy) ஆகிய நாடுகளில் கிளவுட் ப்ரொவைடர்களான அருபா, சூபா, கிளவுட் சிக்மா மற்றும் டிஜிட்டல் ஓஷன் அகியவற்றை பயன்படுத்தும் சர்வர்கள் மீது தாக்குதல் நடத்தவும் டிஜிட்டல் கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக சிட்டிசன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் .

ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிள் (Apple) நிறுவனத்துடன் இந்த பகிர்ந்துள்ளனர், மேலும் நிறுவனம் இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ | மின்சாரப் பற்றாக்குறையால் தவிக்கும் சீனா? காரணம் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News