15 வருஷமா சிக்காமல் சரக்கு பாட்டில்களை திருடியவர் சிக்கியது எப்படி?
15 ஆண்டுகளுக்கும் மேலாக 7,000 மது பாட்டில்களைத் திருடியதற்காக பிரெஞ்சுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குடிமகன்களில் சிலர் மதுபாட்டில்கள் திருடுவது ஒன்றும் புதியது இல்லை என்றாலும், ஒருவர் 15 ஆண்டு காலமாக சிக்கிக் கொள்ளாமல் திருடியிருக்கிறார் என்பது தான் இங்கு விநோதமான விஷயமாக இருக்கிறது. பிரான்சில் ஒருவர் பிரபலமான ஒயின் கடையில் வேலை செய்திருக்கிறார். அந்த கடையில் இருந்து பாட்டில்கள் குறைவதை உற்றுநோக்கிய முதலாளி சிசிடிவி கேமராவை செக் செய்திருக்கிறார். அதில் அக்கடையில் வேலை செய்யும் 56 வயதான நபர் தான் ஒயின் பாட்டில்களை திருடிச் செல்வது இருந்திருக்கிறது. உடனே, கோபமடைந்த முதலாளி காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்.
மேலும் படிக்க | அபிதாபி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமா? இந்த விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
இதனையடுத்து, காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் ஒயின் பாட்டில்களை திருடியதற்காக அந்த நபரை கைது செய்துவிட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் இன்னொரு ஹைலைட்டே இருக்கிறது. காவல்துறையிடம், தான் 15ஆண்டுகளாக ஒயின் பாட்டில்களை திருடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதில் காவல்துறைக்கே விநோதமாக இருந்திருக்கிறது. பயத்தில் இதை சொன்னாரா? அல்லது வேண்டுமென்ற அந்த பதிலை மாட்டிய திருடன் சொன்னாரா? என தெரியவில்லை. இருப்பினும் 15 ஆண்டுகளாக ஒயின் பாட்டிலை திருடியதை மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தியை ஜர்னல் டி சான்-எட்-லோயர் என்ற பிரான்ஸ் உள்ளூர் செய்தி தாள் வெளியிட்டிருக்கிறது. சம்பவம் நடந்தது பிரான்சு நாட்டின் ஒயின் பிரதேசம் என அழைக்கப்படும் பர்கண்டியில் நடத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நபரின் தாயார் வீட்டில் நடந்த சோதனையில் 7 ஆயிரம் ஒயின் பாட்டில்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் திருடிய ஒயின் பாட்டில்கள் எத்தனை என்ற முழு விவரம் தெரியவில்லை.
குறிப்பாக, மிக விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை குறி வைத்து தான் திருடியிருக்கிறார் அவர். அதேநேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திருடப்பட்ட பாட்டில்கள் எதையும் விற்றதற்கான ஆதாரம் இல்லை என்று வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடையில் வேலை செய்யும் நபரே 15 ஆண்டுகாலமாக திருடியதை விசாரணையில் ஒப்புக் கொண்டதும், திருடன் 15 ஆண்டுகள் கழித்து சிக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கும்போது பல நாள் திருடன் ஒரு நாள அகப்படுவான் என்ற பழமொழிக்கு பொருத்தமாக இந்த சம்பவம் நடத்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ