WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வெற்றி! ஒருமித்த கருத்து உண்டானது

World Trade Organization Ministerial Conference : உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகம் செய்வது சேவைத் துறைக்கு சுலபமாக மாறிவிட்டது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 08:38 AM IST
  • உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தம்
  • உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு
  • சேவைத் துறை வணிகத்தின் முக்கியத்துவம்
WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வெற்றி! ஒருமித்த கருத்து உண்டானது title=

சேவைத் துறையில் வணிகத்தை எளிதாக்குவதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாட்டின் (World Trade Organization Ministerial Conference) முதல் நாளிலேயே இந்தியாவின் முன்னெடுப்பு மிகப்பெரிய பலனைக் கொடுத்துள்ளது. 

சேவைத் துறையில் வணிகத்தை எளிதாக்குவதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சேவைத் துறை வர்த்தகம் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இனிமேல், சேவைத் துறையில் புதிய விதிகள் உருவாக்கப்படும் என்று உலக வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  உலகின் 71 நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் இணைகின்றன.  

சேவைத் துறையில் மைல்கல் என்று பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். இதற்குக் காரணம், இந்தியாவின் சேவைத் துறை வணிகம் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. 

சேவைத் துறை 
சேவைத் துறை என்பது, நேரடியாக பொருட்களை உற்பத்தி செய்யாத துறை என்று சொல்லலாம். சேவைத்துறை என்பது, கிடங்கு மற்றும் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு சேவைத் தொழில்களை உள்ளடக்கியது. தகவல் சேவைகள், பத்திரங்கள் மற்றும் பிற முதலீட்டு சேவைகள், தொழில்முறை சேவைகள், கழிவு மேலாண்மை, சுகாதார சேவைகள், கலை, பொழுதுபோக்கு கலாசாரம் என சேவைத்துறைக்கான விளக்கம் மிகவும் பெரியது. துல்லியமாக சொல்வது என்றால், பொருட்களுக்கு பதிலாக சேவைகளை வழங்குவது ‘சேவைத்துறை’ என்று சொல்லலாம்.

மேலும் படிக்க | Farmers Protest: உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை விவசாயிகள் எதிர்க்க காரணம் என்ன?
 
சேவைத்துறை பொருளாதாரம்
சேவைத் துறையை மையமாகக் கொண்ட பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் தொழில்துறை அல்லது விவசாயப் பொருளாதாரங்களைக் காட்டிலும் அதீத வளர்ச்சியடைந்துள்ளன.  மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் உற்பத்திக்குப் பிறகு பொருளாதாரத்தின் மூன்றாவது துறையாக சேவைத் துறை உள்ளது என்பது இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சேவைத்துறை வணிகம் வரையறை

அலுவலகம் சுத்தம் செய்வது, மருத்துவ சேவைகள் என்பது முதல் இசைக் கச்சேரிகள் வரை அனைத்து சேவைகளும் இடம்பெறும். டாக்டர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள் மற்றும் சிஏக்கள் என உலக வர்த்தக அமைப்பின் புதிய ஒப்பந்தத்தின் மூலம் பல சேவைப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.
 
சேவைத்துறை தொழில்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்புப் பலன்களைக் கொடுக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய விதிகள் உருவாக்கப்படும் போது, வணிகங்களில் உள்ள பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளும் மாற்றியமைக்கப்படும்.  சேவைத் துறையின் ஏற்றுமதி மற்றும் வணிகச் செலவில் ஆண்டுதோறும் சுமார் 119 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
 
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா 
இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவைப் போலவே தென்னாப்பிரிக்காவும் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை. தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கவலைகளை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும் படிக்க | Train Fare: பயணிகள் ரயில் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைக்கும் இந்திய ரயில்வே!

புதிய ஒப்பந்தத்தை இந்தியாவின் தரப்பைச் சேர்க்க ஒப்புக்கொண்டதால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிலை உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருமித்த கருத்தை எட்டியதற்கு உலக வர்த்தக அமைப்பின் தலைவர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய தொடக்கம்
இந்த புதிய சேவைத்துறை ஒப்பந்தம், புதிய வகையான தொடக்கமாக கருதப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் முழுக் குழுவும் சில உடன்படிக்கைக்கு உடன்பட ஒப்புக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்தம் தொடர்பான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கவலைகள் நிவர்த்தி செய்யபப்ட்டதால், ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது

இந்தியாவின் நிபந்தனை என்ன?
பலதரப்பு அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் இருப்பதாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தை உலக வர்த்தக அமைப்பின் பலதரப்புக் குழு அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் சேர விரும்பும் அனைவருக்கும் அதன் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கையாக இருந்தது.

இந்தியாவின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என உறுதி கிடைத்த பின்னரே இந்தியா தனது ஆட்சேபனைகளை திரும்பபெற்றது. இருந்தாலும், ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என பல நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உள்ள நிலையில், முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு, கடினமான மற்றும் சர்ச்சைக்குரிய WTO பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்குகின்றன.  

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News