போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS), அபுதாபியில் கட்டியுள்ள கோவில் பொதுமக்கள் தரிசனத்திற்காக மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து திறக்கப்படும். அபுதாபியில் கட்டபட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், அபுதாபியை துபாயுடன் இணைக்கும் ஷேக் சையத் நெடுஞ்சாலையில், சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
பழங்கால கட்டுமான முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டுமானத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிலத்தை வழங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரமாண்டமான கோவிலை திறந்து வைத்தார்.
ஏறக்குறைய 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோயில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கோவில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோவில் மூடப்பட்டிருக்கும்.
சுமார் 18 லட்சம் செங்கற்களால் கட்டப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவிலுக்கு இந்தியாவிலிருந்து கங்கை-யமுனை புனித நீர், ராஜஸ்தானில் இருந்து மணற்கல் மற்றும் மர தளபாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோவில் கட்டமைப்பு
கோயிலில் ராமர், கிருஷ்ணர், சிவன், ஜகன்னாதர், சுவாமிநாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகளில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கோவில் பார்ப்பவர்களை பரவசப்பட வைக்கிறது.
திறப்பு விழா பிப்ரவரி 14ம் தேதி
அபுதாபியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான கோவிலை 14 பிப்ரவரி 2024 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிப்ரவரி 15 முதல் 29 வரை முன் பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் அல்லது விஐபி விருந்தினர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அபுதாபியில் இந்து கோயில் திறந்து வைக்கப்பட்டது இந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ