வாஷிங்டன்: முதலில், உதவ முடியாது என கை விரித்த அமெரிக்கா, இப்போது கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில், இந்தியாவிற்கு உதவுவோம் என அமெரிக்கா கூறுகிறது.இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற தங்கள் நாடு இந்தியாவுக்கு உதவும் என்று அமெரிக்காவின் இரண்டு முக்கிய தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'நாங்கள் இந்திய மக்களுடன் இருக்கிறோம்'
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken), 'கொரோனா தொற்றுநோயின் (Corona Virus)  இந்த நெருக்கடி காலத்தில் நாங்கள் இந்திய மக்களுடன் இருக்கிறோம். இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசுடன் நாங்கள் தொடர்பு கொண்டு பணியாற்றி வருகிறோம். இந்திய மக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வீரர்களுக்கு கூடுதல் உதவியை விரைவில் வழங்குவோம்.



'விரைவில் இந்தியாவுக்கு பொருட்களை அனுப்புவோம்'


அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) JAKE SULLIVAN, 'இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவல் குறித்து அமெரிக்கா மிகவும் கவலை கொண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில்,  நட்பு நாடான இந்தியா திறன்பட போராட உதவும் வகையில், விரைவில் அதிக விநியோக உதவியை வழங்குவோம். இது மிக விரைவில் நடக்கும் எனக் கூறியுள்ளார்.
 
அமெரிக்கா முதலில் மறுத்தது


கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளை இந்தியாவுக்கு அனுப்பமுடியாது என அமெரிக்கா முன்பு கைவிரித்தது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருளை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்வீட் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். ஆரம்பத்தில், அமெரிக்கா இதற்கு முடியாது என கை விரித்து விட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை தங்கள் முதல் முன்னுரிமை அமெரிக்க மக்கள் தான் என்றும், எந்தவொரு வெளி நாட்டிற்கும் உதவக்கூடிய நிலையில் இல்லை எனவும் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | எங்களால் ஒன்றும் செய்ய முடியாது: உதவி கோரிய இந்தியாவிடம் கை விரித்த அமெரிக்கா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR