மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம். அங்கு பிரமிடுகளில், பூமியின் என மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது. 


மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அக்கால மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தது, வாழ்க்கை முறை எப்படி இருந்தது என பல விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.


எகிப்திய மம்மிக்கள் பல மர்மங்களைக் கொண்டுள்ளது. அது பற்றிய அனைத்து ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. பல நேரங்களில் இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. 


2,000 ஆண்டுகள் பழமையான மம்மியைப் ஆராய்ச்சி செய்த  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'மிஸ்டீரியஸ் லேடி' என்று பெயரிடப்பட்ட இந்த மம்மியைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், அந்த பெண் புற்றுநோயால் இறந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால் புற்றுநோய் நிபுணர்கள் மட்டுமின்றி, எகிப்திய விஞ்ஞானிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கர்ப்பிணி மம்மியின் மண்டை ஓட்டை ஸ்கேன் செய்தபோது, ​​அந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவந்தது. CT ஸ்கேன் செய்ததில், அந்தப் பெண்ணின் மண்டை ஓட்டின் இடது பக்கத்தில் காணப்பட்ட அடையாளங்கள் உள்ளத்தை மருத்துவர்கள் சுட்டிக் காட்டினர். இதை மருத்துவர்கள் இன்று நாசோபார்னீஜியல் புற்றுநோய் என்று அழைக்கிறார்கள்.


மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா


முன்னதாக  குறிப்பிட்ட இந்த மம்மி 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது ஒரு ஆண் பாதிரியாரின் மம்மி என்று நம்பப்பட்டது, ஆனால் பின்னர் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ​​​​அது ஒரு ஆண் அல்ல, ஒரு பெண் என்று கண்டறியப்பட்டது. மம்மி ஆகும். மேலும் உலகின் முதல் கர்ப்பிணி மம்மியும் இதுவே என்பதும் தெரிய வந்தது. இதற்குப் பிறகு, ஆய்வுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த மம்மியின் CT ஸ்கேன் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்டது. பெண் மம்மியின் இடுப்பு குழியில் கரு இருப்பதை சிடி ஸ்கேன் உறுதி செய்தது. இந்த கருவும் நன்கு பாதுகாக்கப்பட்ட ந் கருவாக இருந்தது.


மரணத்திற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சி தொடரப்பட்டது. அதன் இறப்பிற்கு என்ன காரணம் என்ற கேள்விகள் தொடர்ந்து தங்களுக்கு வந்துகொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பிறகு, அந்தக் குழு அதற்கான காரணத்தைக் கண்டறிய முடிவு செய்து, அது குறித்து மீண்டும் பல ஆய்வுகளைத் தொடங்கியது.


ஆராய்ச்சியில், கர்ப்பிணி மம்மியின் மண்டை ஓட்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ​​அந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நாசோபார்னீஜியல் புற்றுநோய் என்னும்  இந்த அரிய புற்றுநோயில், மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் உள்ள தொண்டைப் பகுதி பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெண்ணின் முகத்தின் எலும்புகளிலும் பெரிய குழி காணப்பட்டது.


மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா: இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR