அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்  2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததார். தேர்தல் வெற்றி பெற்ற ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளை எழுப்பினார். இதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட  டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் தற்போது, செயல்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்ட் டிரம்ப் ஆர்வமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் காணாமல் போன டொனால்ட் டிரம்ப், தற்போது மீண்டும் வந்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்தப் பதிவில், 'I'm Back' அதாவது 'நான் திரும்பி வந்து விட்டேன்' என்று எழுதியுள்ளார். சமீபத்தில், டொனால்ட் டிரம்பின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கேபிடல் ஹில்லில் நடந்த வன்முறைக்குப் பிறகு, டொனால்ட் டிரம்பின் அனைத்து சமூக ஊடக கணக்குகளும்  தடை செய்யப்பட்டன.


மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!


2024ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், 12 வினாடிகள் கொண்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2016 தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு எடுத்ததாக நம்பப்படுகிறது. இந்த பதிவின் மூலம் டொனால்ட் டிரம்ப் தனது அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார் என ஊகிக்கப்படுகிறது. ட்விட்டருக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் திரும்பியுள்ளார்.


அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனவரி 2021 இல் நிறைய வன்முறைகள் நடந்தன. டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த சமயத்தில் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ட்வீட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அவரது இந்த பதிவுகள் ஆத்திரமூட்டும் செயலாக கருதப்பட்டு அவரது அனைத்து சமூக ஊடக கணக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.


மேலும் படிக்க | வரி மோசடி செய்த டொனால்ட் டிரம்பின் நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ