வாடகைக்கு குடியிருக்கும் வீடு பற்றி குறை சொல்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் அந்த குறைகளை கேட்க முடியாது என்று நிச்சயமாக சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏனென்றால் இங்கு நல்ல பெரிய அளவிலான வீடு ஒன்றின் விலையே 80 ரூபாய் என்றால் வாடகைக்கு யாராவது வீடு எடுப்பார்களா என்ன? 


வீடுகளின் விலை மலிவாக இருப்பதால் உலகில் உள்ள பலரும் இங்கு வீடு வாங்க நினைக்கின்றனர். ஆனால், அந்த போட்டியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கர்கள் தான்...


ஏராளமான அமெரிக்க குடிமக்கள் இங்கு வீடு வாங்கி குடியேறி வருகின்றனர். அதனால்தான் அமெரிக்க பேச்சுவழக்கு கேட்பது இங்கு சர்வசாதாரணமாகிவிட்டது, அதன் காரணமாக மக்கள் இப்போது சம்புகா டி சிசிலியாவை மினி அமெரிக்கா என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
 
சம்புகா டி சிசிலியா இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு பல பெரிய வீடுகள் உள்ளன. அதுமட்டுமல்ல, இங்குள்ள வீடுகள் மிகவும் அழகாக இருக்கின்றன.  


மேலும் படிக்க | கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 மில்லியன்
 
பல பெரிய வீடுகள் 80 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மினி அமெரிக்காவில் பல பங்களாக்களும் விற்கப்படுகின்றன. இந்த அதிசய நகரம் இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள ஒரு இடம்.


இந்த இடத்தின் பெயர் சம்புகா டி சிசிலியா. ஒரு யூரோவிற்கு அதாவது சுமார் 100 ரூபாய்க்கு பல வீடுகள் விற்கப்பட்டன. எனவே, இத்தாலியின் இந்தப் பகுதி 'மினி அமெரிக்கா' என்று அழைக்கப்படுகிறது. 


இப்போது இந்த இத்தாலிய நகரம் கைவிடப்பட்ட சொத்துக்களின் புதிய  ஏலத்தை அறிவித்துள்ளது.  


இத்தாலியின் பழமையான பகுதிகளில் ஒன்று
சம்புகா டி சிசிலியா இத்தாலியின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல பெரிய வீடுகள் உள்ளன, முழு பகுதியும் மிகவும் அழகாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு மக்கள் தொகை குறைவாகவே இருந்தது. 


அதன் பிறகுதான் மிக குறைந்த விலையில் வீடுகளை விற்கும் பணி தொடங்கியது. இதற்குப் பிறகு, அமெரிக்கர்கள் இந்த நகரத்தில் குடியேற ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு


16 வீடுகள் ரூ.80க்கும், பிறகு ரூ.160க்கும் விற்கப்பட்டது
சிசிலி நகரம் 2019 இல் வெளிநாட்டு வாங்குபவர்களை ஈர்க்கத் தொடங்கியது, அது 16 வீடுகளை £1 அல்லது ஒரு டாலருக்கு சற்று அதிகமாக விற்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. 
அதன்பிறகுக், ஜூலை 2021 இல், £2க்கு 10 பழைய கட்டிடங்கள் விற்கப்பட்டன.  


இரண்டாவது விண்ணப்ப காலக்கெடு கடந்த நவம்பரில் முடிவடைந்த நேரத்தில், ஆர்வமுள்ள வாங்குபவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோரிக்கைகளால் வீடுகளின் விலை அதிகரித்தது. இறுதியில் வீடுகளின் விலை £500 முதல் £7,000 வரை ஏலம் சென்றன.  


கிட்டத்தட்ட அனைத்து புதிய வாங்குபவர்களும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று சிசிலியின் துணை மேயர் கியூசெப் கேசியோப்போ கூறுகிறார். "வீடு வாங்க இந்த இரண்டாவது ஏலத்தில் விண்ணப்பித்த வர்களில் சுமார் 80% பேர் வடக்கு அமெரிக்காவை சேர்ந்தவர்கள்"


"இங்கு வீடு வாங்க, அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த புதிய விற்பனை நடவடிக்கையை கொரோனா நிறுத்திவிடுமோ என்று நினைத்தோம். ஆனால் அனைத்தும் நன்றாக நடந்தன" என்கிறார் கியூசெப் கேசியோப்போ.


மேலும் படிக்க | செய்யும் தொழிலே தெய்வம்: அதுக்குன்னு இப்படி கின்னஸ் ரெகார்ட் செய்யலாமா
 
கலைஞர்களின் சொர்க்கம்
இந்த வீடுகள் கொஞ்சம் உடைந்திருந்தாலும், மிக அழகான பகுதிகளில் இருப்பதால், உலகிலேயே அதிக மதிப்புள்ள (Cheapest home in the World) ஆனால் விலை மலிவான வீடுகள் கிடைக்கும் இடமாக இந்த இடம் மாறியுள்ளது.


கலைஞர்களுக்கு சொர்க்க வீடாக இருக்கிறது. நிலநடுக்கத்தால் இந்தக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. பலர், மலிவான விலை என்பதால் வீடுகளை வாங்கியிருக்கின்றனர்.


புதிதாக குடியேறுபவர்களால், கிராமத்தின் பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.


இடாஹோவைச் சேர்ந்த இணைய வணிகர் டேவிட் வாட்டர்ஸ்,  இத்தாலிய ரியல் எஸ்டேட் மீது பேரார்வம் கொண்டவர், அவர் புதிதாக வாங்கிய சிசிலியன் குடியிருப்புகளை க்ரவுட் ஃபண்டிங் மூலம் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளார்.


அவர் ஏலத்தில் இரண்டு கட்டிடங்களை வாங்கினார். வாட்டர்ஸ் தன்னை இத்தாலியின் ஒன் யூரோ ஹோம் திட்டத்தின் ரசிகன் என்றும், விளிம்புநிலை சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க விரும்புவதாகவும் கூறுகிறார். சம்புகாவின் பூங்காக்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நன்கொடைகளை வாங்க திட்டமிட்டுள்ள்தாக அவர் கூறுகிறார்.


அவர் எவ்வளவு விலைக்கு வீடு வாங்கினார் தெரியுமா? தலா £500 என்ற விலைக்கு அடுத்தடுத்து இருக்கும் வீடுகளை வாங்கியிருக்கிறார்.


மேலும் படிக்க | ஆன்லைனில் மருந்து வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR