170+ உயிரிழப்பு? தென்கொரியா விமான விபத்துக்கு காரணம் என்ன? எழும் சந்தேகங்கள்... நீடிக்கும் மர்மம்!
South Korea Flight Crash: தென்கொரியாவில் இன்று நடந்த கோர விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்த பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.
South Korea Flight Crash Latest News Updates: தென்கொரியாவின் முவான் நகரில் பயணிகள் விமானம் இன்று கொடூர விபத்தில் சிக்கியது. போயிங் 787-800 என்ற ஜேஜூ பயணிகள் விமானத்தில் மொத்தம் 181 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரை 85 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, அதன் சக்கரங்கள் பழுதானதாக தெரிகிறது. இதனால், விமானத்தின் அடிப்பகுதி சாலையை உரசியபடியே வருவதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பார்க்கமுடிகிறது. இதனால், விமானம் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விமான ஓடுபாதையில் கடும் புகைகளை கிளப்பிக்கொண்டு வேகமாக சென்று தடுப்புச்சுவரில் வேகமாக மோதியதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை?
இந்த விமானம் தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு வந்துள்ளது. இதில் இருந்து 181 பேரில் தற்போது வரை 2 பேரை மீட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய தீயணைப்பு ஏஜென்சி தகவல் தெரிவித்துள்ளது. மீதம் உள்ளவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளதாக தென்கொரியாவின் ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.
மேலும் படிக்க | மொத்தமாக முடங்கும் அமெரிக்கா... அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்... திடீரென என்னாச்சு?
முவான் விமான நிலையத்தில் அந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சித்தபோது, வழக்கமான தரையிறக்கம் தோல்வியில் முடிந்தது என்றும் பறவையினால் கூட ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் ஊடக அறிக்கைகளின்படி,"விமானத்தின் சக்கரங்கள் உள்ளிட்ட லேண்டிங் கியர் தரையிறங்கும்போது செயல்படவில்லை. எனவேதான் வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சக்கரங்களில் பறவை சிக்கியிருந்தால் கூட இதுபோல் அவை செயல்படாமல் போக வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்படுகிறது. பறவை மட்டுமின்றி மோசமான வானிலையும் இந்த கோர விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த 3 கேள்விகள் - நீடிக்கும் மர்மம்
இந்நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் விமானிகள் உள்ளிட்ட பலரும் விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதில் முக்கிய ஒரு கேள்வி, 3 கி.மீ., நீளமுள்ள விமான ஓடுபாதையில் அந்த விமானம் ஏன் இவ்வளவு வேகமாக வந்தது என்பதுதான். மேலும், இந்த விமானம் முன்னரே திட்டமிடப்பட்டு வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்யப்பட்டது என்றால் ஏன் தீயணைப்பு வீரர்கள் யாரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இதுபோல் லேண்டிங் கியர் பழுதானால் அந்த விமானம் நீண்ட நேரத்திற்கு வானில் வட்டமிட வேண்டும். அதாவது, பழுதுக்கான தீர்வை கண்டுபிடிக்கும் வரையோ அல்லது தீப்பிடிப்பதை தடுக்க எரிபொருள் முழுவதுமாக காலியாகும் வரையோ வட்டமிட வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது. ஆனால், இந்த விமானம் வழக்கத்திற்கு மாறாக தரையிறங்குவதற்கு தாயாராகும் முன்னர் வானில் வட்டமிடவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, இதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இருப்பினும் இந்த கேள்விகளுக்கு தற்போது வரை பதில் இல்லை என்பதால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ