கோவிட் போய் நாளாச்சு! ஒலிம்பிக் கிராமத்தில் ‘இந்த’ தடையை நீக்கிய பிறகு 3 லட்சம் ஆணுறைகளுக்கு ஆர்டர்!
Intimacy Ban Lifted : ’நெருக்கமாக இருக்கத் தடை’ என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டதை அடுத்து மூன்று லட்சம் ஆணுறைகள் ரெடி! ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைகள் குவிப்பு...
பாரிஸ் நகரில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ’நெருக்கமாக இருக்கத் தடை’ என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, ஒலிம்பிக் கமிட்டி மூன்று லட்சம் ஆணுறைகளை ஒலிம்பிக் போட்டிகளுக்காக வாங்கி சேமிக்கின்றனர்.
இந்த செய்தி சாதாரணமானதாக தோன்றாது. ஏன் இப்படி, எதற்கு இவ்வளவு என ஆணுறைகளின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகள் எழலாம். அதேபோல, நெருக்கமாக இருக்கத் தடை எப்போது விதிக்கப்பட்டது என்ற கேள்விகளும் எழலாம்.
COVID-19 தொற்றுநோயை அடுத்து, 2022ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், நெருக்கமாக பழகுவதற்கான விதிகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தபோதிலும், அந்தத் தடை விலக்கப்படாததற்கு காரணம் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்துவிட்டது, ஆனால், 2022ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியான தொடர்பைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு இடையே சுமார் ஆறரை அடி தூரத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளையாட்டுகளில் ஆணுறைகளை வழங்கும் பாரம்பரியம் 1988 சியோல் ஒலிம்பிக்கில் இருந்து தொடங்கியது.
தற்போது நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிமுறைகளை ஆராயும்போது, நெருக்கத் தடை என்ற விஷயம், இந்த சூழலுக்குத் தேவையில்லை என்றும், ஏனெனில் கோவிட் தொடர்பாக விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டதால் இந்த நெருக்கத் தடை கட்டுப்பாடும் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான சேவை வழங்குநர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவார்கள். அங்கு 300,000 ஆணுறைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குனர் லாரன்ட் மைச்சாட் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நெருக்கமாக இருக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் விதிமுறைகளும் அமலில் இருந்தாலும், அதிகாரிகள் 150,000 ஆணுறைகளை ஒலிம்பிக் கிராமத்தில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸ் நடத்தும் வரவிருக்கும் விளையாட்டு திருவிழாவைப் பற்றி பேசிய மைச்சாட், கிராமத்தில் 14,250 குடியிருப்பாளர்களுக்கான தயாரிப்புகளை செய்து வருவதாகவும், விளையாட்டு வீரர்களுக்காக 300,000 ஆணுறைகளை சேமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடின் 88% வாக்குகளுடன்.. 5வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!
"ஆணுறைகளை விநியோகிப்பது என்பது விளையாட்டு வீரர்கள் தங்கும் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்கு அல்ல, அது விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைவருக்கும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் என்றும், இந்த விழிப்புணர்வை தங்கள் சொந்த நாடுகளுக்கும் வீரர்கள் கொண்டு சேர்க்கவேண்டும்" என்று ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்கள்
கொரோனா பரவல் அதிகமாக இருந்த ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளின்போது கோவிட்-19 வழிகாட்டுதல்களின்படி, விளையாட்டு வீரர்கள் தங்களுடைய போட்டியாளர்களைச் சந்திக்கவோ, தங்களுடைய தங்குமிடங்களை விட்டு வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை.
விளையாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைப்பது மற்றும் கைகுலுக்குவது என அவசியம் இல்லாமல் பிறரைத் தொடுவது தேவையல்ல என்றும் அறிவுறுத்தல்கள் கூறின. விளையாட்டுகளைப் பார்க்கும் மக்கள் கைதட்டவோ, பாடவோ அல்லது அரட்டையடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு கிளம்புவதற்கு 14 நாட்களுக்கு முன்பும், தங்கள் நாட்டிற்கு திரும்பிய 14 நாட்கள் வரையிலும் வேறு ஒருவரையும் சந்திக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதோடு, விளையாட்டு வீரர்களுக்கு அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது என கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ