ரஷ்ய அதிபர் புடின் 88% வாக்குகளுடன்.. 5வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), 87 சதவீத வாக்குகள் பெற்று ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2024, 11:01 AM IST
  • நவல்னியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த விளாடிமிர் புடின்
  • இரண்டாவது இடத்தில் உள்ள நிகோலாய் கரிடோனோவ்
  • ரஷ்ய தேர்தல்களின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் 88% வாக்குகளுடன்.. 5வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! title=

ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), 87 சதவீத வாக்குகள் பெற்று ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்க உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் நிலையில், ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த பொது தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விளாடிமிர் புடின், சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு அதிபராக அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ள தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். முன்னதாக, நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் கிட்டத்தட்ட இதே முடிவுகள் வந்தன. Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், புடின் 87.8% வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிக்கு பின், மக்களிடையே உரையாற்றிய விளாடிமிர் புடின், கடந்த 200 ஆண்டுகளில், நீண்ட காலம் பதவியில் இருக்கும் ரஷ்ய தலைவர்களில் ஒருவராக தான் உருவெடுத்துள்ள நிலையில், ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் என்பதே இருக்காது என்று கூறினார். ரஷ்யாவுக்கும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புடின் எச்சரித்துள்ளார். மூன்றாம் உலகப் போர் மூளுவதை யாரும் விரும்பவில்லை. ஆனால், உக்ரைனில், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தலையீடு, தனை நோக்கி இட்டுச் செல்லும் என எச்சரித்தார்.

71 வயதான புடின், ஜோசப் ஸ்டாலினை விட அதிக காலங்களுக்கு ஆட்சி செய்த பெருமையை இதன் மூலம் பெறுகிறார். 200 ஆண்டுகளுக்கும் மேலான ரஷ்யாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவர் என்ற பெருமையை, 71 வயதான புடின் எளிதாகப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தைப் பிடித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிகோலாய் கரிடோனோவ் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததாக முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. விளாடிஸ்லாவ் டாவன்கோவ் மூன்றாவது இடத்தையும், லியோனிட் ஸ்லட்ஸ்கி நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் படிக்க | அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது.... மேலை நாடுகளை எச்சரிக்கும் புடின்!

கடந்த மாதம், ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்து வந்த நவல்னியின் மரணம் குறித்து, முதல் முறையாக பொதுவில் பேசிய அதிபர் புடின், அவரது மரணம் "சோகமான நிகழ்வு" என்று குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நவல்னியின் பெயரைப் பொதுவில் பயன்படுத்திய புடின் “திரு. நவல்னியைப் பொறுத்தவரை.... ஆம், அவர் காலமானார். இது எப்போதும் ஒரு சோகமான நிகழ்வாக இருக்கும்’ என குறிப்பிட்டார்

ரஷ்ய தேர்தல்களின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. அதிபர் புடின் வெற்றி பெற்றது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "புடின் அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து, மற்றவர்கள் தனக்கு எதிராக போட்டியிடுவதைத் தடுத்துள்ளதால், தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ நடக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது" என்றார். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் தேர்தல் ஒரு மோசடி என்று கூறினார்.. உக்ரைன் மீதான புட்டின் முழு அளவிலான தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் இந்தத் தேர்தல்கள் நடந்தன.

மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News