சந்திரனுக்கோ சுக்கிரனுக்கோ போகலாம்! செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் வேண்டவே வேண்டாம்
Science Factors Of Mars: உங்களுக்கு தனித்துவமான ஆளுமை இருப்பதாக நினைத்தாலும், நீங்கள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்கள்...
செவ்வாய் கிரகத்திற்கு யார் செல்லக்கூடாது? அதற்கான காரணங்கள் என்ன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்: அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கணினி உருவகப்படுத்துதல்களை உருவாக்கியுள்ளனர்.
சிவப்பு கிரகத்தை காலனித்துவப்படுத்தும் முயற்சி
சிவப்பு கிரகத்தை காலனித்துவப்படுத்தும் முயற்சியின் போது, அங்கு மனிதர்கள் உயிர்வாழ வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ள முடிந்ததாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
'இந்த உலகத்திற்கு வெளியே' வாழ்வது மிகவும் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த செயல் என்ற எண்ணம், இதுபோன்ற முயற்சிகளுக்கு காரணமாக இருக்கும். இந்த ஆரம்ப மகிழ்ச்சி விரைவில் குறையக்கூடும், ஏனெனில் பூமியில் வாழ்வதைப் போல செவ்வாயில் வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல.
பூமிக்கு வெளியே மனித வாழ்க்கை
வெளிப்படையாக, இந்த உலகத்திற்கு வெளியே மனித வாழ்க்கை என்பது சில சமயங்களில் கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில், மோசமான அனுபவமாக இருக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு ஒருவர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் மனித காலனியின் 28 ஆண்டுகள் வரையிலான கணினி உருவகப்படுத்துதல்களை இயக்கியுள்ளனர். சிவப்பு கிரகத்தை காலனித்துவப்படுத்தும் முயற்சியின் போது அங்குக் உயிர்வாழ வாய்ப்பில்லாத ஆளுமை வகை என்பது உறுதியாக தெரிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த காலனியில் உயிரினம் என மக்கள் வாழ்ந்தாலும், அதிகபட்சம் 22 ஆக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மெட்ரோவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. "செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை நிறுவுவது நம்பமுடியாத சிக்கலான பொறியியல் பிரச்சனையாகும். செவ்வாய் கிரகத்திற்கு விருந்தோம்பல் தன்மை மிகவும் குறைவு."
"சில அடிப்படை கனிமங்கள் மற்றும் நீரைத் தோண்டி எடுப்பதற்கு அப்பால், காலனித்துவவாதிகள் பூமியின் மறு அளிப்பு மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தேவைகளை நிரப்புதல் போன்றவற்றைச் சார்ந்து இருப்பார்கள், செவ்வாய் கிரகத்தின் நீரை சுவாசிக்க ஆக்ஸிஜனாகவும், எரிபொருளுக்காக ஹைட்ரஜனாகவும் பிரிப்பது என்பது தொழில்நுட்பத்தால் மட்டுமே செய்ய வேண்டியிருக்கும்" என்று இந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.
"தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சவால்களுக்கு அப்பால், எதிர்கால குடியேற்றவாசிகள், உளவியல் மற்றும் மனித நடத்தை சவால்களை எதிர்கொள்வார்கள். எதிர்கால செவ்வாய் காலனிகளின் நடத்தை மற்றும் உளவியல் தொடர்புகளை நன்கு புரிந்துகொள்வதே எங்கள் குறிக்கோள்."
மேலும் படிக்க | நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய தயார்: ஆதித்யா எல்1... இஸ்ரோவின் அடுத்த அதிரடி!!
தங்கள் ஆய்வுக்காக, செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ தேவையான பொருட்கள் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் .
செவ்வாய் கிரகத்தில் வாழக்கூடியவர்களில் நான்கு வகை ஆளுமைகளை (neurotic, reactive, social and agreeable) அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். உருவகப்படுத்துதல், சாதாரண சூழ்நிலைகளிலும், விபத்துகள் மற்றும் பூமியில் இருந்து விநியோகத்தில் தாமதம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்த உருவகப்படுத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை சமாளிப்பதற்கு ஏற்ற ஆளுமை கொண்டவர்களாக குடியேற்றவாசிகள் இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'நியூரோடிக்' ஆளுமை வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட அந்த நபர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்பட்டனர்.
எனவே, உங்களுக்கு மிகவும் தனித்துவமான ஆளுமை இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லக்கூடாது. அது சாதனை புரிந்த மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கும். ஆனால் அதை பகிர்ந்துக் கொள்ளக்கூட முடியாது.
மேலும் படிக்க | நிலவை அடுத்து சூரியனுக்கு செல்ல திட்டம்..! கெத்து காட்டும் இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ