இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Mars Transit: செவ்வாயின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இவர்கள் நினைத்தது இப்போது நடக்கும். பண வரவு அதிகமாகும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 18, 2023, 11:12 AM IST
  • கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது.
  • இந்த பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
  • இந்த பெயர்ச்சி காலத்தில் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள்.
இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள் title=

செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. செவ்வாய் ஒரு சுப கிரகமாக இருப்பதுடன், கிரகங்களின் தளபதி என்றும் அழைக்கப்படுகிறார். தைரியம், வலிமை, ஆற்றல், நிலம், சகோதர பாசம், வலிமை மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். இதனுடன், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதி கிரகமாக உள்ளார். மேலும் அவர் மகர ராசியில் உச்சம் பெற்று, கடகத்தில் நீச்சம் பெற்றுள்ளார். 

செவ்வாய் கிரகம் இன்று அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். பொதுவாகவே அனைத்து கிரகங்களில் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும், செவ்வாயின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இவர்கள் நினைத்தது இப்போது நடக்கும். பண வரவு அதிகமாகும். கன்னி ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் பொதுவாக அனைத்து விதமான வேலைகளிலும் சுப பலன்கள் கிடைக்கும். நிலம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். இதனுடன் மூத்த சகோதரரிடமிருந்து பண உதவி கிடைக்கும். இது தவிர வேலை-வியாபாரத்திலும் முன்னேற்றம் காணலாம்.

மேலும் படிக்க | சிம்மத்தில் சதுர்கிரஹி யோகம்! சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் இணைந்த யோகம்

மிதுன ராசி

செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதனுடன் வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் அமையும். இந்த காலத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். இது தவிர தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும். திடீர் பணவரவு மற்றும் லாபம் உண்டாகும்.

சிம்ம ராசி

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் நிகழும் கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் அசுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது. கன்னி ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் செல்வ ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகிறார். ஆகையால் இந்த காலத்தில் பொருளாதார பலமும் திடீர் பண ஆதாயமும் உண்டாகும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் முடிவடையும். சிம்ம ராசிக்காரர்கள் தங்களது அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பார்கள். பேச்சில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் பேச்சால் மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். 

விருச்சிக ராசி

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். தொழிலில் திடீர் வளர்ச்சி ஏற்படும். தொழில்-வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிலம் தொடர்பான பணிகளால் பண ஆதாயம் உண்டாகும். உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். நீண்ட கால சட்ட சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். சொத்து கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். பழைய முதலீட்டில் வெற்றி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சீக்கிரமா பணக்காரர் ஆகனுமா? பூஜையறையில இந்த மாற்றங்களை செய்தால் குபேரரின் அருள் உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News