இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர், பாதுகாப்பு மற்றும் அரசியலின் தொடர்பு தொடர்பான சில அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் பட்ஜெட் அம்சங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதை அடுத்து, கடும் நிதி நெருக்கடி நேரத்திலும், மக்கள் நலனுக்கான திட்டங்களில் செலவழிக்காமல், பாதுகாப்பு துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிக்கலில் பொருளாதாரம்


நாட்டின் அரசாங்கத்தின் பட்ஜெட் திட்டம் முற்றிலும் சமநிலையில் இல்லை என்றும் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் டாக்டர் பர்வேஸ் தாஹிர் நம்புகிறார். பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது.  பட்ஜெட்டில் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசின் மொத்த வருவாய் ரூ.2,463 பில்லியனாக உள்ளது. இந்த வருமானத்தை விட அதிகமாக அதாவது சுமார் 2573 பில்லியன் ரூபாய் வட்டி செலுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது. கடும் நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில், 639 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு செலவிடப்பட்டதும் இதுவே மிகப்பெரிய செலவீனமானது என்பதும் மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.


பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகள்


இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகள் அதிகமாக இருப்பது குறித்து எப்போதும் விவாதம் நடந்து வருகிறது. இந்திய பாதுகாப்புச் செலவு எப்போதும் பாகிஸ்தானை விட அதிகமாக உள்ளது. பாதுகாப்பு பட்ஜெட் பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் ஒப்பிடப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியா  மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.7 சதவீத த்தை பாதுகாப்பிற்காக செலவிடும் நேரத்தில், பாகிஸ்தான் 3.8 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட்டுள்ளது.  ஆனால் நாட்டின் பொருளாதார நிபுணர்கள், பாதுகாப்பு பட்ஜெட்டை குறைக்காமல் மற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சமநிலையை பராமரிக்க முடியும் என்று வாதிடுகின்றனர்.


மேலும் படிக்க | பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு


திட்டங்கள் பல இடங்களில் இயங்குகின்றன


பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சகங்களின் தற்போதைய செலவினத்தில் 15 சதவீதத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெளிவிவகார அமைச்சகத்தின் செலவில் எந்தக் குறைப்பும் இல்லை. பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் பெருமளவிலான மேம்பாட்டுப் பணத்தைச் செலவிடுவது குறித்து பலர் ஆச்சரியம் தெரிவித்தனர். ISPR தலைவர் கைபர் பக்துன்க்வாவின் இணைக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள  3,654 திட்டங்களைப் பற்றி பேசினார். சந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் கட்டுமானம் மற்றும் மறுவாழ்வு ஆகியவை இதில் அடங்கும்.  ஆனால், இதற்கான பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


பணம் எங்கிருந்து வரும்:  நிபுணர்கள் கேள்வி


மொத்த செலவு 162 பில்லியன் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று நிபுணர்கள் கேட்கிறார்கள். சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (சிபிஇசி) திட்டங்களுக்கு ராணுவம் பாதுகாப்பு அளித்து வரும் குவாதரில், ராணுவ தளபதி உள்ளூர் மக்களின் நலனுக்காக தனது பட்ஜெட்டில் இருந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். இராணுவத்தின் பட்ஜெட்டில் இருந்து 162 பில்லியன் ரூபாய் அளவுக்கு பெரிய தொகை வந்திருக்க முடியாது எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் உணவு பற்றாக்குறை இருக்கும் போது, நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆகும் செலவை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


மேலும் படிக்க | பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்... கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!


மேலும் படிக்க | தொண்ட புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்த ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ