தொண்ட புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்த ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Scientific Research: வாய்வழி உடலுறவு தொண்டை புற்றுநோயுடன் தொடர்புடையது என்று ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது. டான்சில்ஸ் மற்றும் தொண்டையின் பின்புறம் உள்ள புற்றுநோய், பெரும்பாலும் HPV வைரஸால் ஏற்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 29, 2023, 05:19 AM IST
  • பாப்பிலோமா வைரஸ் HPV பரவுவதற்கு காரணம் இதுதான்
  • எச்சரிக்கை செய்யும் ஆய்வு முடிவுகள்
  • தொண்ட புற்றுநோய்க்கான காரணம்
தொண்ட புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்த ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் title=

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கத்திய நாடுகளில் தொண்டைப் புற்றுநோய் வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளன. எனவே, தொண்டை புற்றுநோய் வழக்குகளின் அதிகரிப்பு தொடபாக மேற்கொள்ளபப்ட்ட ஆய்வுகள் அதிர்ச்சியான முடிவு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய காலங்களில், வல்லுநர்கள் தொண்டை புற்றுநோயை "தொற்றுநோய்" என்று அழைக்கின்றானர்.

ஓரோபார்னீஜியல் புற்றுநோய்

டான்சில்ஸ் பகுதி மற்றும் தொண்டையின் பின்புறம் ஏற்படும் ஓரோபார்னீஜியல் புற்றுநோய் (oropharyngeal cancer) எனப்படும் தொண்டை புற்றுநோயின் அதிகரிப்பு மருத்துவ நிபுணர்களை கூட கவலையடைய செய்துள்ளது. இந்த வகை புற்றுநோய் முக்கியமாக மனித பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகிறது, இது பாலியல் ரீதியாக பரவுகிறது.

மனித பாப்பிலோமா வைரஸ் பரவல்

பல பாலியல் பங்காளிகளைக் கொண்ட நபர்கள், வாய்வழி உடலுறவைக் கடைப்பிடிப்பவர்கள், தங்கள் வாழ்நாளில் இந்த வகையான தொண்டை புற்றுநோயைப் பெறும் அபாயத்தில் உள்ளனர் என்று, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மற்றும் மரபியல் அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஹிஷாம் மெஹன்னா கருதுகிறார்.

மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

ஆய்வின் முடிவுகள்

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில், 'ஹெச்பிவி மற்றும் ஓரோபார்னீஜியல் புற்றுநோயின் வழக்கு-கட்டுப்பாட்டு ஆய்வு' (case-control study of HPV and Oropharyngeal Cancer) என்ற ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், தங்களது வாழ்க்கையில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வாய்வழி-பாலியல் பங்காளிகளைக் கொண்ட நபர்கள், வாய்வழி உடலுறவு கொள்ளாதவர்களை விட 8.5 மடங்கு அதிகமாக ஓரோபார்னீஜியல் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

புற்றுநோய்

யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் யுனைடெட் கிங்டமில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் காட்டிலும் ஓரோபார்னீஜியல் புற்றுநோய் இப்போது மிகவும் பொதுவானதாக இருக்கிறது.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் அவரும் அவரது சகாக்களும் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டும் பேராசிரியர் மெஹன்னா, சில நாடுகளில் வாய்வழி செக்ஸ் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. யுனைடெட் கிங்டமில் புற்றுநோய் அல்லாத டான்சிலெக்டோமி பிரச்சினைகளைக் கொண்ட கிட்டத்தட்ட 1,000 பேரில், 80 சதவீத பெரியவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் வாய்வழி உடலுறவைக் வழக்கமாக வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்..

மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?

HPV தடுப்பூசி தடுப்பு நடவடிக்கை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இளம் பெண்களுக்கு HPV தடுப்பூசி பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தி கான்வெர்சேஷன் இதழில் பேராசிரியர் ஹிஷாம் மெஹன்னாவின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள் மத்தியில் 85 சதவிகிதம் வரை தடுப்பூசி கவரேஜ் உள்ள நாடுகளில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) காரணமாக ஆண் பாப்பிலோமா வைரஸால் (HPV) பாதுகாக்கப்படுகிறது.

இருப்பினும், சர்வதேச அளவில், குறைந்த HPV தடுப்பூசி கவரேஜ் உள்ள நாட்டிலிருந்து ஒருவர் வரும்போது, ஏராளமான பாலியல் தொடர்புகள் ஏற்படக்கூடிய ஹைப்பர் கனெக்டிவிட்டி யுகத்தில், தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தடுப்பூசி உத்தரவாதம் அளிக்காது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இந்தியாவில், பிப்ரவரி 2023 இல் ஆறு மாநிலங்களில் ஒன்பது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

HPV தடுப்பூசி பிரச்சாரத்தின் இந்த முதல் கட்டம் முறையே, கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் 255 மில்லியன் சிறுமிகளுக்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்குள் 160.2 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வாங்க இந்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்பதும், இதற்கான ஏலத்திற்கான உலகளாவிய அழைப்பை டெண்டர் செய்ய தயாராகி வருகிறது என்பதும் புற்றுநோய்க்கான போராட்டத்தில் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் படிக்க | டிரம்ப் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை! முன்னாள் அதிபரை எச்சரித்த நீதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News