UN Staff-க்கு COVID vaccine-னை இலவசமாக அளிப்போம்: ரஷ்ய அதிபர்
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் வி-ஐ (Sputnik V) இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய தலைமையைக் குறிக்கும் ஒரு பெரிய அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் அதன் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் வி-ஐ (Sputnik V) இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
ஐ.நா பொதுச் சபையின் 75 வது அமர்வில் அறிவிப்பு
கொரோனா வைரஸ் (Corona Virus) தடுப்பு மருந்துகளின் வளர்ச்சியில் ஒத்துழைக்க விரும்பும் நாடுகளுக்கு மாஸ்கோ விரைவில் ஒரு மெய்நிகர் மாநாட்டை ஏற்பாடு செய்யும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்தார்.
முற்றிலும் பாதுகாப்பான, பயனுள்ள மருந்து Sputnik V!
ஐ.நா பொதுச் சபையின் 75 வது ஆண்டு அமர்வில் ரஷ்யா உருவாக்கிய உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V பற்றிய விரிவான தகவல்களை புடின் வழங்கினார். ரஷ்யாவின் இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் உலகிற்கு நம்பகமானது என்று Vladimir Putin கூறினார்.
பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் உலகுக்கு செய்தி
இந்த திசையில் செயல்படும் நாடுகளுடன் 'Sputnik V' தடுப்பு மருந்து தயாரிப்பதில் ரஷ்ய அரசு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது என்று அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். மற்ற நாடுகள் தயாரித்த தடுப்பு மருந்துகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவுக்கு (Russia) முழு ஆற்றல் உள்ளது என்றும் அதனால்தான் ரஷ்யாவால் இந்த தடுப்பு மருந்தை முதலில் உலகத்தின் முன் வைக்க முடிந்தது என்றும் புடின் தெரிவித்தார். இதனால் உலகின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.
பொருளாதார நெருக்கடி' குறித்த கவலை
கொரோனா தொற்றுநோய் காரணமாக, உலகின் பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது என்று புடின் கூறினார். எனவே, உலகளாவிய இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க ரஷ்யா ஒத்துழைக்க தயாராக உள்ளது. குறிப்பாக நாடுகளுக்கு தடுப்பு மருந்தை அளிப்பது குறித்த பாதையில் ரஷ்யா பயணத்தைத் துவக்கி விட்டது. ஏனென்றால், உலகெங்கிலும் தடுப்பு மருந்துகளை (Vaccine) வழங்கும் சவால் மிக்க பணி இப்போதே துவங்ககப்பட வேண்டும்.
WHO வலுப்படுத்தப்பட வேண்டும்
உலக சுகாதார அமைப்பின் திறனை தர ரீதியாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை புடின் வலியுறுத்தினார்.
உலக மற்றும் பிராந்திய மட்டத்தில் கொரோனா தொற்றுநோயைத் (Corona Pandemic) தடுப்பதற்காக ரஷ்யா ஒரு பயனுள்ள பிரச்சாரத்தை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் கூறினார். ரஷ்யாவிற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால், விரைவில் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது எளிதாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: Good News: Iodine Solution 15 வினாடிகளில் Corona Virus-ஐ செயலிழக்கச் செய்யும்: ஆய்வு!!