உக்ரைனின் டோனெட்ஸ்க் - லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் உக்ரைனின் கிழக்கு மாகாண பகுதிகளான, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப்படும் இரண்டு பிரிவினைவாத பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ளார் என உக்ரைனில் இருந்து வரும் சமீபத்திய செய்திகள் கூறுகின்றன. ரஷ்யத் தலைவரும் இந்தப் பகுதியில் தனது படைகளை இறக்கியுள்ளார். இதற்கு அமைதி காக்கும் படை என பெயரிடப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் படையெடுப்பின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் கலவரம் நடந்து வருகிறது
இந்த இரண்டு பகுதிகளையும் சுதந்திரமாக ரஷ்யா முறைப்படி ஏற்றுக்கொண்ட சம்பவத்தால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பிற நாடுகள் திகைத்து நிற்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யா பலத்த விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. ரஷ்யா சுதந்திரமாக ஏற்றுக்கொண்ட உக்ரைனின் இந்த இரண்டு பகுதிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா
உக்ரைனின் தொழில்துறை பவர்ஹவுஸ்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி போருக்கு முன்பு உக்ரைனின் தொழில்துறை சக்தியாக கருதப்பட்டது. கனரக தொழில்கள், சுரங்கம், எஃகு உற்பத்தி மற்றும் பெரிய நிலக்கரி சுரங்கங்கள் இருந்தன. 2014 இல் ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கிரிமியன் தீபகற்பத்தை இணைத்த பிறகு, இந்த பகுதி இரண்டு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அவை இரண்டு வெவ்வேறு குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டன. உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்கள் என பெயரிடப்பட்டது, ரஷ்ய ஆதரவு பகுதி டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (Donetsk People's Republic - DPR) மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (Luhansk People's Republic- LPR) என அழைக்கப்பட்டது.
2014 ரஷ்ய படையெடுப்பு
2014 ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் முழுவதையும் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ரஷ்ய எல்லையில் சுமார் 6,500 சதுர மைல் பரப்பளவில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே வைத்துள்ளனர்.
2014 முதல், இந்த பகுதி உக்ரைனில் இருந்து துண்டிக்கப்பட்டது. இங்கு சுமார் 15 முதல் 20 லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். பிரிவினைவாத அமைப்புக்கும், உக்ரைன் அரசுக்கும் இடையிலான மோதலில் 14,000 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR