ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2022, 09:11 AM IST
ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா! title=

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

"படையெடுப்பு தொடங்கும் தருணம் வரை, அதனை தடுக்க இராஜீய நிலையிலான நடவடிக்கையை தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்பதில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி கூறினார்.

ஆக்கிரமிப்பு நிகழாத வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கனும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவும் வியாழன் அன்று ஐரோப்பாவில், சந்திப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்

ஒரு அறிக்கையில், Psaki, "நாங்கள் இராஜீய நடவடிக்கைகளுக்கு எப்போதும் தயாராக இருக்கும் நேரத்தில், ரஷ்யா போரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது, ​​உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு ரஷ்யா தொடர்ந்து தயாராகி வருவதாகத் தெரிகிறது. "

ஞாயிற்றுக்கிழமை இரு தலைவர்களுடனான ஒரு நாள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களையும் சந்திக்க வைக்க பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முயற்சி எடுத்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனில் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இடையே கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. திங்களன்று கிய்வ் அரசாங்கப் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறிய கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தற்போது பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக,  ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20)  அன்று, ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், உக்ரைனில் அத்தியாவசிய பணியில் அல்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News