Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா

Russia Ukraine Crisis: டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2022, 04:51 PM IST
  • ரஷ்யா உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
  • ரஷ்யா 150,000 துருப்புகளை உக்ரைனின் எல்லைகளுக்கு அருகில் நிறுத்தியுள்ளது.
  • ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் இறுதி கட்ட தாக்குதலை நடத்த தயாராக உள்ளனர்.
Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா title=

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, குண்டுவெடிப்பு குறித்த முழுமையாக தகவல் எதுவும் வெளிவரவில்லை. 

அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஆதரவில் உள்ள டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறிய மக்கள், தென்மேற்கு ரஷ்ய நகரமான தாகன்ரோக்கில் இரயில்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்ல காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ன்றன.  

மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் தங்கள் பகுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும், பொது அணிதிரட்டலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் உக்ரைன் தொடர்பான உச்சிமாநாட்டிற்கு கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) ரஷ்ய தலைவருடன் தொலைபேசியில் உரையாடிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உச்சிமாநாடு பற்றிய முக்கியமான செய்தியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், திங்களன்று (பிப்ரவரி 21) கிரெம்ளின் உக்ரைன் தொடர்பான பைடன்-புடின் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கூறியது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா! 

"எந்தவிதமான உச்சிமாநாடுகளையும் ஏற்பாடு செய்வதற்கான, குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி பேசுவதற்கான சரியான நேரம் இது அல்ல" என்று கிரெம்ளின் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த உச்சிமாநாடு "உறுதியான திட்டங்கள்" எதுவும் வகுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

சமீபத்திய வாரங்களில் ரஷ்யா 150,000 துருப்புகளை உக்ரைனின் எல்லைகளுக்கு அருகில் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகள் மதிப்பிட்டுள்ளன.

அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம், "நாற்பது முதல் ஐம்பது சதவிகிதத்தினர் (அந்த துருப்புக்களில்) தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளனர்." என்று குறிப்பிட்டார். 

ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் இறுதி கட்ட தாக்குதலை நடத்த தயாராக இருக்க அவர்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில்தான் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகளை புகுத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News