World News In Tamil: உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஏழு பெண்களைத் திருமணம் செய்தது மூலம் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த ஏழு பெண்களில் இருவர் சகோதரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கும் அந்த ஆணின் பெயர் ஹபீப் என்சிகோன்னே. ஹபீப் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 10) ஏழு பெண்களை மணந்தார். இருப்பினும், ஹபீப் முதல் முறையாக மாப்பிள்ளை ஆகவில்லை. இவருக்கும் முன்பே திருமணம் நடந்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முசன்யூசா என்ற பெண்ணை மணந்தார்.


மாப்பிள்ளை பணக்காரராம்


ஒவ்வொரு மணப்பெண்ணின் வீட்டிலும் நடத்தப்படும் ஆடம்பரமான பாரம்பரிய முஸ்லீம் திருமண முறைப்படி ஒரே நாளில் ஹபீப் தனது ஏழு பெண்களை மணந்துகொண்டார். உள்ளூர் ஊடக வெளியீட்டின் படி, ஹபீப் மிகவும் பணக்காரர் என கூறப்படுகிறது. அவர் தனது ஏழு மனைவிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அன்றே தனது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கைத் துணைவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்.


மேலும் படிக்க | உணவு பொட்டலத்தில் காரித் துப்பிய டெலிவரி ஊழியர்... வாடிக்கையாளர் அதிர்ச்சி - சிசிடிவி வீடியோ


அனைவருக்கும் கார் பரிசு


மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருமண விழாவில் மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார், ஹபீப். அதுமட்டுமின்றி மனைவிகளின் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார்.


வாகன அணிவகுப்பு


ஹபீப் அனைத்து மனைவிகளையும் தனித்தனியாக அவர்களது வீட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள ஹபீப்பின் மனைவிகள் வாகன அணிவகுப்பில் வீட்டிற்கு வந்தனர். இதில் 40 லிமோக்கள் மற்றும் 30 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். இந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும் இதனால் மிகவும் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் இதுபோன்ற ஒரு ஏற்பாடை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று ஒப்புக்கொண்டனர்.


100 குழந்தைகளுக்கு தந்தை


இது இந்தியர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வினோதமாக இருந்தாலும் உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக உள்ளது. இது அவரது குடும்பத்தில் சகஜம் என்றும் ஹபீப்பின் தந்தை கூறியுள்ளார். ஏழு பெண்களை திருமணம் செய்த பிறகும், ஹபீப் இன்னும் அதிகமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில், அவர் 100 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டும் என்பது ஆசை எனவும் கூறப்படுகிறது. 


பொறாமையில்லை


வரவேற்பு நிகழ்ச்சியில் ஹபீப் தனது மனைவிகளை மிகவும் பாராட்டினார். தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை என்று அவர் கூறினார். அதனால்தான் ஹபீப் ஏழு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஹபீப், 'நான் அனைவரையும் தனித்தனியாகச் மணந்துகொண்டேன். ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, நான் அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டேன்" என்றார். 


மேலும் படிக்க | எடை குறைக்க வழி சொல்லும் ஜப்பான் ஏர்லைன்ஸ்! இது ஆடை குறைப்பு வழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ