உணவு பொட்டலத்தில் காரித் துப்பிய டெலிவரி ஊழியர்... வாடிக்கையாளர் அதிர்ச்சி - சிசிடிவி வீடியோ

Bizarre Viral News: வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த உணவு பொட்டலத்தில் உணவு டெலவரி ஊழியர் எச்சில் துப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், அந்த சம்பவம் குறித்தும் முழுமையாக இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 15, 2023, 04:18 PM IST
  • இந்த சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்துள்ளது.
  • இச்சம்பவம் வாடிக்கையாளரின் வீட்டு சிசிடிவில் பதிவானது.
  • அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்.
உணவு பொட்டலத்தில் காரித் துப்பிய டெலிவரி ஊழியர்... வாடிக்கையாளர் அதிர்ச்சி - சிசிடிவி வீடியோ title=

Bizarre Viral News: உணவகத்தில் இருந்த வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், தான் டெலிவரி செய்ய வந்த உணவுப் பொட்டலத்தை அந்த வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு, அதன் மீது பலமுறை எச்சில் துப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சிகள் தான் தற்போது வைரலாகி வருகின்றது. தான் டெலிவரி செய்ததற்கு குறைந்த டிப்ஸை செலுத்திய வாடிக்கையாளரிடம் தனது கோபத்தை வெளிப்படுத்த அவர் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சுகாதாரக்கேடான செயலில் அப்படி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

3 அமெரிக்க டாலர் டிப்ஸ்

உணவை டெலிவரி செய்த ஊழியர் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு வருவதும், ஆர்டரை வாயிலில் வைப்பதும், பணத்தைப் பெறக் காத்திருப்பதும் வைரலாகி வரும் அந்த சிசிடிவி வீடியோவில் காண முடிகிறது. டெலிவரிக்கான கட்டணத்தையும் டெலிவரிக்கான டிப்ஸையும் அவர் தனது தொலைபேசியில் சரிப்பார்ப்பதும் அதில் தெரிகிறது. விரைவில், அந்த நபர் வாசலில் அவர் வைத்த பார்சலை நோக்கி நடந்து, அதில் எச்சில் துப்புவதும் அதில் பதிவானது. 

வைரலாகி வரும் அந்த வீடியோ:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ONLY in DADE (@onlyindade)

மேலும் படிக்க | எடை குறைக்க வழி சொல்லும் ஜப்பான் ஏர்லைன்ஸ்! இது ஆடை குறைப்பு வழி

உணவு டெலிவரி பெற்ற அந்த வாடிக்கையாளர், டெலிவரி ஊழியருக்கு டிப்ஸாக மூன்று அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 250) வழங்கியதாகவும், அந்த தொகை அவருக்கு ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால் அவர் பார்சலில் எச்சில் துப்பியதால் தான் வருத்தம் அடைந்ததாகவும் வாடிக்கையாளர் தரப்பில் கூறப்படுகிறது.

13 வயது சிறுவனும், அவனது தாயாரும் அந்த உணவு ஆர்டரை செய்துள்ளனர். அவர்கள் வீட்டு பெல் கேமராவில் இருந்து இந்த சம்பவத்தை அந்த வாடிக்கையாளர்கள் கவனித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அந்த வாடிக்கையாளர் பெண், "எனது எதிர்வினையாக அந்த உணவை நான் தூக்கி எறிய விரும்பினேன். இது மிகவும் அருவருப்பானது" என்றார். இருவரும் உணவுக்காக சுமார் 30 அமெரிக்க டாலர்கள் செலுத்தியதாகவும், அதை வீட்டிற்கு டெலிவரி செய்த டெலிவர் ஊழியருக்கு மூன்று அமெரிக்க டாலர்கள் டிப்ஸாக கொடுத்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பணிநீக்கம்

இருப்பினும், டெலிவரி பார்ட்னர் தனக்கு கிடைத்த டிப்ஸில் மகிழ்ச்சியடையவில்லை. அவர் உணவு பையில் எச்சில் துப்புவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதால், டெலிவரி நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. ஃபுளோரிடாவில் துப்பிய சம்பவத்திற்குப் பிறகு அந்தந்த ஓட்டுநர் இனி நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் கமெண்டில் ஒரு பயனர்,"டெலிவரி ஆப்ஸ் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணங்களில் 20 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கிறது. மற்றும் டிரைவருக்கு 100% வேலைக்கு 2.50 அமெரிக்க டாலரை தான் வழங்குகிறது. வேலையைச் செய்வதற்கான உபகரணங்களையும் குறைவாகவே வழங்குகிறது. இதனால் ஊழியர்களுக்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது, வெறும் பிச்சைத் தொகை தான் கிடைக்கிறது. 

இந்த உணவு டெலிவரி தளங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், அவர்கள் அடிப்படையில் தொழிலாளர்களை சுரண்டி, அவர்களை வாடிக்கையாளர்களை வெறுக்க வைக்கிறார்கள், அவர்கள் தங்கள் வேலைக்கு பணம் சம்பாதிக்காதது அவர்களின் தவறு. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிராக தொழிலாளர்களை நிறுத்துகிறார்கள். அவர்கள் உருவாக்கிய பிரச்சனையை கை கழுவி விடுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகளின் சடலங்களை காட்சிபடுத்திய மெக்ஸிகோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News