வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளியேறும் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தம்பதியின் பாதுகாப்பில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி பற்றி தெரியவந்துள்ளது. இந்த தம்பதியின் பாதுகாப்பிற்காக அவர்களது வீட்டின் அருகில் அமெரிக்க ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு வீரர்களுக்கு கழிவறை மற்றும் அலுவலக வசதிகளுக்காக இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு அமெரிக்க ரகசிய பாதுகாப்பு அமைப்பு மாதத்திற்கு 3000 டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவான்கா தம்பதியினருக்கு வாஷிங்டனில், 6 படுக்கையறைகள் 7 கழிவறைகளைக் கொண்ட 5000 சதுர அடி வீடு உள்ளது. சி.என்.என் அறிக்கையின் படி, பாதுகாக்கும் முகவர்கள் இவான்கா டிரம்பின் (Ivanka Trump) வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.


இவான்கா டிரம்ப் மற்றும் அவரது கணவரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தம்பதியின் வீட்டில் இருந்த 7 கழிவறைகளில் ஒன்றை பயன்படுத்த ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாகவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.


அமெரிக்க (America) ரகசிய சேவை அதன் வீட்டை 2017 ஆம் ஆண்டு வாடகைக்கு எடுத்தது. அதாவது இதுவரை சுமார் 100,000 டாலருக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.


ALSO READ: டிரம்பிற்கு எதிராக கண்டன தீர்மானம்.. அடுத்தது என்ன..!!!


இவான்காவின் வீட்டில் கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்த ரகசிய சேவை அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று வெள்ளை மாளிகையின் (White House) செய்தித் தொடர்பாளர் ஜுட் டீரெ குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


தங்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாக டீரே கூறினார்.


அவர்களின் வீடு எப்போதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு திறதிருந்தது என்றும் எந்த அனுமதியும் அவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ரகசிய சேவை இந்த கருத்தை மறுத்ததாக கூறப்படுகிறது.


இருப்பினும், கழிவறை வசதிகளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டுள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, பலவித புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 


ALSO READ: ட்ரம்ப்-ன் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR