'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்காக குழு அமைக்கப்பட்டதா? உண்மை என்ன?

one nation one election: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 6, 2023, 10:35 AM IST
  • ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்
  • சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய மத்திய அரசு முடிவு
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு?
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்காக குழு அமைக்கப்பட்டதா? உண்மை என்ன? title=

புதுடெல்லி: செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்த அமர்வில் பல பெரிய மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று விவாதிக்கப்படுகிறது, அதில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முக்கியமானது..மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தும் உத்தேசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனுமானிக்கின்றன.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் (One Nation, One Election) நடத்தும் நோக்கில் மத்திய அரசு நகர துவங்கியுள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்கத் தொடங்கியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற குழு அமைத்தால், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்த அமர்வில் பல பெரிய மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று விவாதிக்கப்படுகிறது, அதில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முக்கியமானது.

மேலும் படிக்க | படிப்படியாக குறையும் தக்காளி விலை.. செப்டம்பரில் ஆழ வைக்க ரெடியாக்கும் வெங்காயம்

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை தேர்தல் தந்திரம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் அந்த அமர்வில் இந்த உத்தியை முன்வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், எனவே நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை தேர்தல் தந்திரம் என்று எதிர்கட்சிகள் சாடுகின்றன. 2024ஆம் ஆண்டில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறையை  அமல்படுத்த பாஜக முன்னெடுப்பை எடுத்து வருகிறது. இந்த மாதம் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்து வருகின்றன.

தற்போது வரை இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்றம் மற்றம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதாவது நாடாளுமன்றத்துக்கு ஐந்து வருடமும் சட்டமன்றத்திற்கு ஐந்து வருடமும் ஆட்சி முடிவறும் ஆண்டுகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட வருகிறது. 

மேலும் படிக்க | சமையல் கேஸ் சிலிண்டரைப் போலவே வணிக சிலிண்டர் விலையும் குறைந்தது! விலை ரூ 1,695

நாட்டில் கடந்த 1967ம் ஆண்டு வரை இந்த இரண்டு தேர்தல்களும் ஒரே காலகட்டத்தில்தான் நட்டத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் நடந்த ஆட்சி கலைப்பு காரணமாக தேர்தல்கள் நடத்தப்படும் காலங்கள் மாற்றப்பட்டன. இந்த நிலையை மாற்றி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே முறையாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 

இந்நிலையில் மீண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. தற்போது இந்த மாதம் 18 முதல் 22ம்தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து மசோதா முன்வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது திமுக தலைமை ஆன அரசு ஆட்சி செய்து வருகிறது இதன் ஆட்சி காலம் 2026 வரை உள்ளது.

மத்திய பாஜக அரசு முன்வைத்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆரம்பம் முதலே திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு மனநிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு மனநிலையில் இருப்பதாக அதிமுக கருதுகிறது.

அப்படி ஒரு வேலை ஒரே நாடு ஒரே தேர்தல் முறையின் மூலம் தேர்தல் நடைபெற்றால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் இடமும் அதிமுக கருதுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! ஜனவரி முதல் 50% டிஏ ஹைக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

---

Trending News