ரயில்வே அமைச்சர் அளித்த மிகப்பெரிய தகவல்: பெண் பயணிகளுக்கு கிடைக்கும் கன்ஃபர்ம் சீட்!!

Indian Railways: பெண்கள் ரயிலில் இருக்கை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களுக்கான முக்கிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 04:32 PM IST
  • ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு நல்ல செய்தி.
  • பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும்.
  • ஸ்லீப்பர் வகுப்பில் ஆறு பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் அளித்த மிகப்பெரிய தகவல்: பெண் பயணிகளுக்கு கிடைக்கும் கன்ஃபர்ம் சீட்!! title=

இந்திய ரயில்வே செய்திகள்: ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு நல்ல செய்தி!! இப்போது பெண்கள் ரயிலில் இருக்கை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களுக்கான முக்கிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. பெண்களை மனதில் வைத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி, பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும். 

பெண்களுக்கு இட ஒதுக்கீடு

இப்போது இந்திய ரயில்வே மூலம் நீண்ட தூர பயணம் செல்லும் ரயில்களில் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பெண்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் வசதிக்காக ரிசர்வ் பர்த் வசதியை உருவாக்கியபோது இன்னும் பல வசதிகளையும் துவக்கியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 

ஸ்லீப்பர் வகுப்பில் ஆறு பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் வகுப்பில் பெண்களுக்கு ஆறு பெர்த்கள் ஒதுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கரீப் ரத் மற்றும் துரந்தோ உள்ளிட்ட முழு குளிரூட்டப்பட்ட விரைவு ரயில்களில் மூன்றாவது ஏசி வகுப்பில் (3ஏசி வகுப்பு) ஆறு பெர்த்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி 

ரயிலின் ஒவ்வொரு ஸ்லீப்பர் பெட்டியிலும் (Sleeper Class) ஆறு கீழ் பெர்த்களும் (Lower Berths), 3 டயர் ஏசி பெட்டியில் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த்களும், 2 டயர் ஏசியில் மூன்று முதல் நான்கு லோயர் பெர்த்களும், மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) ஜிஆர்பி மற்றும் மாவட்ட காவல்துறை பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள். இது தவிர, ரயில்கள் மற்றும் நிலையங்களில் பெண்கள் உட்பட பிற பயணிகளுக்காக ஜிஆர்பி உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News