Train Ticket Transfer Rules: ரயிலில் பயணம் என்பது பாதுகாப்பான மற்றும் மிக குறைந்த விலையில் செல்லக்கூடிய ஒரு பயணமாக கருதப்படுகிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒரு சில நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். இருப்பினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்துக்கு 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியிருக்கும். அப்படி முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
டிக்கெட் பரிமாற்றம்
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, கடைசி நேரத்தில் உங்கள் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டால், உங்கள் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம். ஆனால் இந்த பரிமாற்றம் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி இடையே மட்டுமே மேற்கொள்ள முடியும். அவர்களைத் தவிர உங்கள் டிக்கெட்டை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் முதல் LPG சிலிண்டர் வரை: விலை குறைய புதிய பிளான்
இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
* முதலில் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும். டிக்கெட் கவுண்டரில் வாங்கிய டிக்கெட் என்றால் அதனை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
* இதற்குப் பிறகு உங்கள் அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு மையத்திற்குச் செல்லவும்.
* யாருடைய பெயரில் டிக்கெட்டை மாற்ற விரும்புகிறீர்களோ, அசல் ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்லவும். அவற்றின் புகைப்பட நகலையும் வைத்திருக்க வேண்டும்.
* இதற்குப் பிறகு, கவுண்டரில் விண்ணப்பித்து டிக்கெட் பரிமாற்றத்தைக் கோருங்கள். விண்ணப்பத்துடன் ஆதார் நகலை இணைக்க மறக்காதீர்கள்.
எப்போது டிக்கெட் மாற்றலாம்
ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு மையத்திற்குச் சென்று உங்களின் டிக்கெட் பரிமாற்ற விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், நீங்கள் ரயிலில் உங்கள் இடத்திற்கு அனுப்ப விரும்பும் நபரின் ஆதார் அட்டையின் புகைப்பட நகலையும் இணைக்க வேண்டும். உங்களிடம் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை இல்லை என்றால், வாக்காளர் அட்டையையும் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, உங்கள் பெயரில் உள்ள டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, குடும்ப உறுப்பினர் பெயரில் டிக்கெட் எடுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ