ரயில் பயணிகள் கவனத்திற்கு! ரயில்வே டிக்கெட்டிலும் மானியமா... அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ரயில் பயணத்திற்கு ஆகும் செலவில், பாதிக்கு மேல் ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டு மானியம் வழங்குகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத தகவல் ஆகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2022, 12:53 PM IST
  • ரயில்வே அமைச்சகம் மூலம் அனைத்து பயணிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
  • EMU வாகனங்களை இயக்க திட்டம்.
  • கடந்த ஆண்டு ரயில்வே மொத்தம் ரூ.62 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு!  ரயில்வே டிக்கெட்டிலும் மானியமா... அமைச்சர் வெளியிட்ட தகவல்! title=

இந்திய இரயில்வே என்பது நாட்டில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ள போக்குவரத்து. நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கான ஒரே முக்கியமான போக்குவரத்து வழி ரயில்வே மட்டுமே. விமானத்திற்குப் பிறகு மக்கள் நீண்ட தூரம் பயணிக்க, பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ரயில்வே தான். ரயிலில் பயணம் செய்வது சிக்கனமானது மற்றும் வசதியானது. ஆனால் உங்களின் பயணச் செலவில் பாதிக்கு மேல் ரயில்வேயே அமைச்சகம் ஏற்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

சென்ற வருடம் மட்டும் 62 ஆயிரம் கோடி ரூபாய் மானியம்

ஆம், ரயிலில் பயணம் செய்யும்போது பயணச் செலவில் பாதிக்கு மேல் ரயில்வே மானியமாக செலுத்துகிறது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து கூறுகையில், பயணிகள் கட்டணத்தில் 55%க்கும் அதிகமான சலுகைகளை ரயில்வே வழங்குகிறது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே ரயில் கட்டணத்தில் 62 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது என்று கூறினார். ரயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே அமைச்சர் செவ்வாய்க்கிழமை உத்திர பிரதேசத்தில் உள்ள, பிஜ்னோருக்கு வந்திருந்தார்.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்!

ரயில்வே அமைச்சகம் ரூ.100ல் ரூ.55 செலவிடுகிறது

 ரயில்வே அமைச்சகம் மூலம் அனைத்து பயணிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது என ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். இது சுமார் 55 சதவீதம் ஆகும். அதாவது, ரயில்வே தரப்பில் இருந்து எந்த வழித்தடத்திலும் ரூ.100 செலவழிக்கும் இடத்தில், பயணிகளிடம் இருந்து ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பல்வேறு வகை பயணிகளுக்கு ரயில்வே மொத்தம் ரூ.62 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

EMU வாகனங்களை இயக்க திட்டம்

ரயில்வே துறையால் எந்தெந்த புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் கேட்டபோது, ​​கட்டுமானத்தில் உள்ள இந்திய ரயில்வேயில் EMU ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றார். EMU ரயிலில் எஞ்சின் இல்லை. அது மெட்ரோவைப் போலவே செயல்படுகிறது. இந்த ரயில்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெட்டிகளில் மின்சாரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் ரயில் இயக்கப்படுகிறது. அதே அமைப்பு EMU வாகனங்களிலும் இருக்கும்.

BSNL 5ஜி சேவை

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மூலம் நாட்டில் 5ஜி சேவையை தொடங்கப் போவது குறித்து, ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். பிஎஸ்என்எல்-ல் இருந்து 5ஜி சேவை அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று கூறினார். அடுத்த 500 நாட்களில் நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் இந்த சேவையை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த அரசு ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News