ஆகஸ்ட் 2வது வாரம் (மேஷம் முதல் கடகம் வரை) இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்

Weekly Horoscope, August 08-13: ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான வாரத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிபலன்களை தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2022, 01:51 PM IST
  • தொழிலில் கடின உழைப்புக்கு ஏற்ப உரிய பலன்கள் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • குடும்ப சூழ்நிலை மிகவும் நிம்மதியாக இருக்கும்.
ஆகஸ்ட் 2வது வாரம் (மேஷம் முதல் கடகம் வரை) இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம் title=

வார ராசிபலன், ஆகஸ்ட் 08-13:  இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த வாரம் உங்களுக்கு எந்த நிறம், எந்த எண் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான வாரத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிபலன்களை தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி பலன், ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 13 வரை: இந்த வாரம் குடும்பம் மற்றும் நிதிக் கண்ணோட்டத்தில் நன்மை உண்டாகும். தனிப்பட்ட வேலையில் வெற்றி பெற்று மன நிம்மதி அடைவீர்கள். கடினமான காரியத்தை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். எதையும் ஆழமாகப் புரிந்துகொண்டு, அதன்பின் செயல்படுவது உங்களின் சிறப்பு.  முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

சில சமயங்களில் மற்றவர்களின் வார்த்தைகளை நம்புவதால், பாதகம் ஏற்படலாம். எனவே உங்கள் மீது நம்பிக்கையுடன் செயல்படுங்கள், அப்போதுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும், தொடர்புகளை வலுவாக வைத்திருங்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவதும் அவசியம்.

பணியிடத்தில் சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இது நன்மை பயக்கும். தொழிலதிபர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பான சில பிரச்சனைகளும் வரலாம்.அரசு ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிடும்.

காதல்  - குடும்ப சூழ்நிலை மிகவும் நிம்மதியாக இருக்கும். அனைத்து உறுப்பினர்களின் சிறந்த ஒருங்கிணைப்பு காரணமாக வீட்டில் ஒரு இனிமையான சூழ்நிலை இருக்கும்.

முன்னெச்சரிக்கைகள் - ஆரோக்கியம் சீராகும் என்றாலும் ஒரு சிறிய அளவிலான ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். இருமல் சளி பாதிப்பை உணரலாம். சிறிது கவனத்துடன் இருந்தால், நோய் தடுப்பு சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு 
 
அதிர்ஷ்ட எண் - 6

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

ரிஷபம் ராசிபலன், ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 13 வரை: இந்த வாரம் பயண காலம் இருக்கும், நன்மைகளும் உண்டாகும். வீட்டு அலங்காரம் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் உங்களை பிஸியாக வைத்திருப்பீர்கள். வீட்டுப் பராமரிப்புப் பொருட்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங்கிலும் நேரம் செலவழிக்கப்படும். மாணவர்கள் தொழில் சம்பந்தமான சில நல்ல தகவல்களைப் பெறலாம். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளும் தீரும்.

வீட்டின் வேலைப்பளு காரணமாக, சில முக்கியமான வேலைகளை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே, திட்டமிட்டு வேலை செய்வது மிகவும் முக்கியம். சில நேரங்களில் கோபம் அல்லது பேச்சில் கசப்பு காரணமாக, செய்யும் வேலையில் சிக்கல் ஏற்படலாம். இந்த நேரத்தில் எந்த வகையான பரிவர்த்தனை செய்யும் போதும் கவனமாக இருக்கவும்.

இந்த வாரம் தொழில் சம்பந்தமாக எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். வணிகத் துறையில் கூடுதல் கண்காணிப்பு தேவை. ஊழியர்களின் சில அலட்சியங்களும் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஒருவித சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகபூர்வ நீண்ட பயணம் சாத்தியமாகும்.

காதல் - கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். குடும்பத்துடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். காதல் உறவில் வெளிப்படைத்தன்மை இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் பிரிந்து செல்வது போன்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

முன்னெச்சரிக்கைகள்- வாயு மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். நிறைய ஜூஸ்களை குடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை 
அதிர்ஷ்ட எண் - 9

மேலும் படிக்க | ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

மிதுனம் ராசி பலன், ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 13 வரை: சிறப்பான சூழ்நிலை நிலவும் மற்றும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் உருவாக்கும் கொள்கைகள், செயல்படும் போது மாறும். நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். வீட்டின் பராமரிப்பு தொடர்பான வேலைகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெரும்பாலான நேரத்தை வெளிப்புற நடவடிக்கைகளில் செலவிடுவீர்கள், இதன் காரணமாக உங்களால் குடும்ப விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த முடியாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, அலட்சியமாக இருப்பதை விட, பணியை ரத்து செய்வதே சரியானது.

பணியிடத்தில் சில மாற்றங்கள் தேவை. தொழில் சம்பந்தமான வேலைகளில் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். கூட்டாண்மை தொடர்பான வியாபாரத்திலும் சில புதிய திட்டங்கள் தீட்டப்படும். ஆனால் எந்த விதமான ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்கவும். சில பெரிய பிரச்சனைகள் வரலாம். பணப் பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் துணை - கணவன் மனைவிக்கிடையே சில சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இது குடும்பத்தை பாதிக்காது. நீங்களே உட்கார்ந்து தீர்த்து வைத்தால் நல்லது. காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருங்கள்.

முன்னெச்சரிக்கைகள்- உடலில் லேசான பலவீனம் மற்றும் சோர்வு இருக்கும். கவனக்குறைவாக இருக்காதீர்கள், உடனடியாக சிகிச்சை பெறுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை 
அதிர்ஷ்ட எண் - 3

கடக ராசி பலன், ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 13 வரை: மாணவர்களின் படிப்பு அல்லது தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். உங்கள் திறமைகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இது உங்களுக்கு மிகச் சிறந்த முடிவுகளைத் தரும். மூதாதையர் சொத்து சம்பந்தமான தகராறுகளும் யாரோ ஒருவரின் மத்தியஸ்தத்தால் எளிதில் தீர்க்கப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குடும்பம் ஒன்று கூடும்.

உணர்ச்சிவசப்படுவதால், ஒரு சிறிய எதிர்மறையான விஷயம் கூட உங்களை வருத்தப்படுத்தும். அந்நியர்களை நம்பவே வேண்டாம். உங்களுக்கு துரோகம் செய்யப்படலாம் அல்லது நீங்க ஏமாற்றப்படலாம். குழந்தையின் பிடிவாதமான அணுகுமுறையும் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே குடும்பத்தில் ஒழுக்கத்தை பேணுவது மிகவும் அவசியம்.

நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த தொழிலில் விரிவாக்கம் தொடர்பான திட்டத்தை முடிக்க இன்று சரியான நேரம். பெரிய ஆர்டர்களையும் காணலாம். பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மேலும், ஏதேனும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் தங்கள் படிப்பு தொடர்பான வேலை கிடைக்கும் என்ற சிறந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

காதல் விவகாரங்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. மூன்றாவது நபரால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள்.

முன்னெச்சரிக்கைகள்- மூட்டுகளில் வலி மற்றும் வாயுத் தொல்லை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக எண்ணெய் உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கிரீம் 
அதிர்ஷ்ட எண் - 8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News