இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் அங்கு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று சூழலால், நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2021, 01:59 PM IST
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! அவசர நிலை பிரகடனம்! title=

கொழும்பு:- இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் அங்கு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று சூழலால், நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. 

இந்நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.  இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான முறையில் பராமரிக்க இயலும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  மேலும், ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் கமிஷனராகவும் அரசு நியமித்துள்ளது. வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரிசி, நெல், சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என ஜனாதிபதி அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில், அரிசி, சர்க்கரை, பால் மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுகிறது. மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் போன்ற எரிபொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ALSO READ ஆன்லைன் கேம்களில் மூழ்கி கிடப்பவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட அரசு!

அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன்னியச் செலாவணியை பயன்படுத்த உதவும் வகையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை மந்திரி உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார்.  எரிபொருள் பயன்பாடு குறையவில்லை என்றால், அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மக்கள் பலரும் உணவிற்கு தவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News