மலச்சிக்கல் பிரச்சனையா? இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

Constipation Cure: மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 06:57 PM IST
  • இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்.
  • மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் தங்கள் மன அமைதியை இழக்கிறார்கள்.
  • இது பல நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையா? இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் title=

நல்ல குடல் ஆரோக்கியம் நமது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் குடல் ஆரோக்கியம் முழு உடலின் ஆற்றலுக்கான முக்கிய புள்ளியாகும். குடலில் பிரச்சனை ஏற்பட்டால், உடலின் மற்ற பகுதிகளில் அதன் விளைவுகள் தெளிவாகத் தெரியும். ஒரு ஆரோக்கியமற்ற குடல் உடலின் பல பாகங்களில் வீக்கத்திற்கு காரணமாக அமையும். ஆரோக்கியமற்ற குடல் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. மேலும் பல நோய்களுக்கு உடலை ஆளாக்குகிறது. 

ஆரோக்கியமற்ற குடல் வயிற்றில் அடிக்கடி வாயு உருவாக்கம், வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தொண்டை அல்லது மார்பில் எரிச்சல் அல்லது அசௌகரியம் போன்ற வயிற்றுக் கோளாறுகளின் அறிகுறிகளை ஏற்படுத்தும். சில உணவுகளை உட்கொள்வது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி குடலை ஆரோக்கியமாக்கும். மலச்சிக்கல் என்பது ஆரோக்கியமற்ற குடல் காரணமாக எழும் பிரச்சனையாகும்.

இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார். மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் தங்கள் மன அமைதியை இழக்கிறார்கள். இது பல நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்துகிறது. மலச்சிக்கலில் இருந்து விடுபடவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சுகாதார நிபுணர்கள் பல உணவுகளின் பட்டியலை அளித்துள்ளார்கள். 

மேலும் படிக்க | Weight Loss Food: இந்த பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் 

பிளம்ஸ்: 

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற, பிளம்ஸை சாப்பிடுங்கள். பிளம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது குடலுக்குள் தண்ணீரை இழுத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த உலர்பழம் மலச்சிக்கலைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

காய்கறி சாறு: 

உங்களுக்கு பிடித்த காய்கறிகளில் செய்யப்பட்ட காய்கறி சாற்றை காலை அல்லது மாலை ஒரு கிளாஸ் குடிக்கவும். கீரை + தக்காளி + பீட்ரூட் + எலுமிச்சை சாறு + இஞ்சி ஆகியவற்றைக் கலந்து ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் ஜூஸ் செய்யலாம்.

திரிபலா சாப்பிடுங்கள்: 

திரிபலா ஒரு அற்புதமான மூலிகை. இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று முக்கிய மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகள் அனைத்தும் மலச்சிக்கலை போக்க உதவுகின்றன. தூங்கும் முன் ஒரு கப் வெதுவெதுப்பான பால் அல்லது வெந்நீரில் அரை டீஸ்பூன் திரிபலாவை எடுத்துக் கொள்ளவும்.

ஓட்ஸ் சாப்பிடுங்கள்: 

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன்ஸ் நிறைந்துள்ளது. இது புரோபயாடிக் செயல்பாடுகளைக் கொண்ட கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. ஓட்ஸ் நுகர்வு நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நெய் சாப்பிடுங்கள்: 

மலச்சிக்கல் நோயிலிருந்து விடுபட, உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள். நெய் மலச்சிக்கலைப் போக்க வல்லது. ஆயுர்வேத சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் நம் உடலை உயவூட்டுகிறது மற்றும் குடல் பாதையை சுத்தமாக வைத்திருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Anemia: இரத்த சோகையை சரி செய்ய உதவும் சூப்பர் உணவுகள், இன்றே சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News